கொரோனாவை 4 நாட்களில் குணப்படுத்தும் 103 ரூபாய் மாத்திரை கிளென்மார்க் கம்பெனி கண்டுபிடித்தது

by admin
163 views

கொரோணா பாதித்தவர்களை 103 ரூபாய்க்கு விற்பனை ஆகும் ஃபேவிஃபிராவிர் குணப்படுத்தும் என கூறும் மும்பை கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் அந்த மருந்தை தயாரிப்பதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இரவு, பகல் பாராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் செயல்படும் கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் மருந்து உற்பத்திக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பெற்றுள்ளது என்பது சற்றே ஆறுதலான செய்தி.  

இந்த ஒரு மாத்திரையின் விலை ரூ.103க்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த மாத்திரையை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ள கோவிட் நோயாளிகளுக்கும் அளிக்கலாம் எனவும் எந்த பாதிப்பும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கிளென்மார்க் தலைவர் கிளென் சல்தானா கூறுகையில், ஃபேவிஃபிராவிர் மாத்திரை குறைந்த அளவு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களுக்கு கொடுத்து பார்த்ததில் 88 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த மாத்திரை தயாரிக்க அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சி என கூறினார். இந்த மருந்து நான்கு நாட்களுக்குள் உடலில் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்தவர்களுக்கு முதல் நாள் 1800 மி.கி. மாத்திரைகள் இரு வேளை அளிக்கப்படுகிறது. 2வது நாள் முதல் அடுத்த 13 நாள்களுக்கு தினமும் 800 மி.கி மாத்திரை இரண்டு எடுத்துக் கொண்டால் போதுமானது. மாத்திரை உட்கொள்ளும் நோயாளிகளின் முழு ஒப்புதலை கையொப்பம் வாயிலாக பெற்ற பிறகே, அவர்களுக்கு மருந்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy