விரைந்து நடக்கிறேன்
அவமானங்களை சுமந்து
வெற்றியை நோக்கி.
இந்த நொடி எனக்கானதாக
இல்லாமல் இருக்கலாம்
ஆனால் எதிர்காலம்
என் பெயர் சொல்லும்.
அதற்காக விரைந்து நடக்கிறேன்..
சோகத்தின் உச்சம் தொட்டேன்
சொந்தங்களும் வெறுக்க கண்டேன்
ஆனால் என்னுள் இருக்கும்
தன்னம்பிக்கை என்னும் விதை
விருட்சமாய் மாறி நிற்கிறது..
நாளைய சரித்திரத்தில் எனக்கென்று
ஒரு பக்கம் காத்திருக்கிறது என்பதை
ஏனோ இன்று பலர் மறந்திருக்கிறார்கள்
நிச்சயம் சாதிப்பேன்.
இந்த உலகின் முன் நானும்
ஒரு நாள் நிமிர்ந்து நிற்பேன்..