அண்ணியின் அந்தரங்க போட்டோக்களை காட்டி மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர்…தற்கொலை செய்துக்கொண்ட புதுமணப் பெண்!

by Web Designer
388 views

கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பத்தை சேர்ந்தவர் அருள். போலீசின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வரும் இவருக்கும் நெல்லித்தோப்பை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவன் -மனைவி இருவரும் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், ராஜேஸ்வரி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதில், என் அக்கா கடந்த 20 ஆம் தேதி எனக்கு போன் செய்தார். அதில் என் கணவரும் அவரது அண்ணி வெண்ணிலாவும் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். நீ என்ன கொண்டு வந்தாய். நாங்கள் சந்தோஷமாக இருக்க இடையூறாக வந்துவிட்டாய் என்று கூறுகிறார்கள் என்றும் என் கணவரோ என் அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்று அவரின் அந்தரங்க போட்டோக்களை காட்டி கொடுமைசெய்கிறார் என்று கூறி அழுதார். அதனால் நாங்கள் சென்னைக்கு வந்து கொண்டிருந்தோம். ஆனால் அதற்குள் என் அக்கா இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. என் அக்கா இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy