டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் குறித்த விசாரணை ஆரம்பம்!

by Author
55 views

ட்ரம்பினை பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் மீதான செனட் சபை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 21ஆம் திகதி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தை, விசாரணை இல்லாமலேயே தள்ளுபடி செய்யும் அளவுக்கு ஆளும் குடியரசுக் கட்சிக்கு மேலவையான செனட் சபையில் பலம் உள்ளது.

எனினும், அந்த சட்டமூலம் மீதான விசாரணைக்குப் பிறகே அது தள்ளுபடி செய்யப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பிடன் போட்டிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவரும், அவரது மகனும் உக்ரைனில் செய்து வரும் தொழில் தொடர்பாக அவர்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டுமென்று அந்நாட்டு அரசாங்கதிற்கு ட்ரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy