தைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்

by Author
175 views

ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து, கிடைத்த புது அரிசியோடு, சர்க்கரை, பால், நெய் சேர்த்து, புதிய மண் பானையில் அவற்றை இட்டு, புதிய மண் அடுப்பில் வைத்துப் பொங்கலிட வேண்டும். அந்தப் பொங்கலோடு, கனிகள், காய்கறிகள், கரும்பு போன்வற்றையும் சூரியனுக்கு படைத்து, உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பொங்கல் அன்று வீட்டில் வயது முதிர்ந்தவர்கள் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று முறை சுற்றி அந்தப் பானையை அடுப்பின் மீது வைக்க வேண்டும். பானையில் வண்ணமயமான கோலமிட்டிருப்பது நல்லது. பானை வைக்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். பின்னர் பால் பொங்கும் பொழுதும், இறைவனுக்கு பொங்கலை நைவேத்தியமாக படைக்கும்பொழுதும் சங்கு ஊதி வழிபட வேண்டும்.

மங்கலம் பொங்க மனையில் பால் பொங்கும் பொழுது “பொங்கலோ பொங்கல்.. மகர சங்கராந்திப்பொங்கல்” என்றும் மூன்று முறை சொல்லிப் பலவிதமான காய்கறிகளை சேர்த்துக் கூட்டுக்குழம்பு வைத்து, அதனை சூரிய பகவானுக்கு படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு. கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும்.

வாழ்க்கை இனிக்கும் கரும்பாக அமைய கரும்பும் வைத்து வழிபட்டால், பொங்கும் பொங்கலைப் போல் இன்பம் பொங்கும்; இனிமை பொங்கும்; அன்பு பொங்கும்; ஆற்றல்பொங்கும். சோறு படைக்கும் பொழுது, சூரியன் இருந்து சாப்பிடும் விதத்தில் இலையின் நுனிப்பகுதியும், அடிப்பகுதியும் அமைவது சிறப்பாகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணிக்குள் அல்லது காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy