ஸ்கொட்டிஷ் சுதந்திர வாக்கெடுப்புக்காக கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது

by Author
62 views

ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜனின் ஸ்கொட்டிஷ் சுதந்திரத்திற்கான இரண்டாவது வாக்கெடுப்புக் கோரிக்கையை இங்கிலாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.

இரண்டாவது ஸ்கொட்டிஷ் சுதந்திர வாக்கெடுப்பு கடந்த பத்தாண்டுகளாக ஸ்கொட்லாந்து எதிர்நோக்கியுள்ள அரசியல் தேக்கம் தொடர்வதற்கு வழிவகுக்குமென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் வாக்கெடுப்பு நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருந்த ஸ்ரேர்ஜன் அதற்கான தமது நிர்வாகத்துக்கு அதிகாரங்களை வழங்குவதற்கான கோரிக்கையை இங்கிலாந்து அரசிடம் முன்வைத்திருந்தார்.

ஸ்ரேர்ஜனின் கோரிக்கை இங்கிலாந்து அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொன்சர்வேற்றிவ் கட்சியினர் ஜனநாயகத்தை மறுக்க முயற்சிக்கிறார்கள் என ஸ்ரேர்ஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இங்கிலாந்து அரசாங்கத்தின் நிராகரிப்புக்கான பதிலையும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் ஸ்கொட்டிஷ் அரசாங்கம் இந்த மாத இறுதிக்குள் அமைக்கும் எனவும் ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேர்ஜனுக்கு பிரதமர் ஜோன்சன் அனுப்பி வைத்துள்ள எழுத்துப்பூர்வப் பதிலில் ஸ்கொட்டிஷ் சுதந்திரத்திற்கான இரண்டாவது வாக்கெடுப்புத் தொடர்பாக ஸ்ரேர்ஜன் முன்வைத்துள்ள வாதங்களை கவனமாகப் பரிசீலித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில்,

நீங்களும் உங்கள் முன்னோடியும் (அலெக்ஸ் சல்மன்ட்) 2014 சுதந்திர வாக்கெடுப்பு ஒரு தலைமுறைக்கு ஒரு முறை வாக்கெடுப்பு என்று தனிப்பட்ட வாக்குறுதியை அளித்திருந்தீர்கள்.

2014 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில் ஸ்கொட்டிஷ் மக்கள் எங்கள் ஐக்கிய ராச்சியத்தை ஒன்றாக வைத்திருப்பதற்கான வாக்குறுதியின் அடிப்படையில் தீர்க்கமாக வாக்களித்தனர்.

இங்கிலாந்து அரசாங்கம் ஸ்கொட்டிஷ் மக்களின் ஜனநாயக முடிவையும், நீங்கள் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் தொடர்ந்து நிலைநிறுத்தும்.

அந்தக் காரணத்திற்காக, இன்னுமொரு சுதந்திர வாக்கெடுப்புக்கு வழிவகுக்கக் க்கூடிய அதிகாரத்தை மாற்றுவதற்கான எந்தவொரு கோரிக்கையையும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy