ஈரான் மீதான ட்ரம்ப் ஒப்பந்தத்துக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆதரவு

by Author
74 views

ஈரான், அணு ஆயுதத்தை வாங்குவதைத் தடுப்பதற்கான தற்போதைய ஒப்பந்தத்தை மாற்ற அமெரிக்கா மற்றும் ஏனைய நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன்தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எதிர்ப்பையும் மீறி, பிரித்தானியா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இணைந்து ஈரானுடனான சிக்கலான அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

இந்த உடன்படிக்கை தொடர்பாக ட்ரம்புக்கு காணப்பட்ட ஒரு பிரச்சினை என்னவென்றால், அது பராக் ஒபாமாவால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பதாகும், எனவே அதற்கு பதிலாக ட்ரம்ப் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரு வழியாக அமையுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முக்கியமான அணுசக்தி நடவடிக்கைகளை மட்டுப்படுத்தும் நோக்கில் 2015 இல் கையெழுத்திடப்பட்ட ஈரான் மீதான கூட்டு விரிவான செயற்திட்டத்திலிருந்து 2018 ஆம் ஆண்டில் அமெரிக்கா விலகியது.

ஈரானின் மீறல்கள் மற்றும் ட்ரம்பின் விலகிச் செல்வதற்கான முடிவால் ஏற்பட்ட சிரமங்கள் இருந்தபோதிலும், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் இந்த அணுகுமுறையில் பகிரங்கமாக உறுதியுடன் உள்ளன.

இந்த உடன்படிக்கையை அகற்றுவதானால் இதற்கு பதிலாக டொனால்ட் ட்ரம்ப்-ஆல் முன்வைக்கப்படும் ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்க தாம் தயாராக உள்ளதாக பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy