உக்ரேனிய விமானத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்: ஈரான் ஜனாதிபதி

by Author
116 views

உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்திய விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

‘உக்ரேன் விமான விபத்து சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இச்சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய அனைவரும், கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்’ என கூறினார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரேன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உட்பட 176 பயணிகள் உயிரிழந்தனர்.

இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள்ளானதாக ஈரான் ஆரம்பித்தில் கூறியிருந்தாலும், பின்னர் மனித தவறு காரணமாக தங்களது ஏவுகணையே விமானத்தை தாக்கியதாக ஈரான் ஒப்புக் கொண்டது.

எனினும், இந்த சம்பவம் குறித்து, ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அத்தோடு கனடா, சுவீடன், உக்ரேன், ஆப்கானிஸ்தான் உட்பட 5 நாடுகள் இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி முன்னதாக இரங்கலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy