‘ரெய்சினா பேச்சுவாா்த்தை’ டெல்லியில் ஆரம்பம்

by Author
91 views

சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடா்பான ‘ரெய்சினா பேச்சுவாா்த்தை’ மாநாடு டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அப்சா்வா் ரிசா்ச் ஃபவுண்டேஷனும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா்.

குறித்த மாநாடு 3 நாட்கள் நடைபெறும். இதில் 7 நாடுகளின் முன்னாள் பிரதமா் மற்றும் தலைவா்கள் பங்கேற்று உலகளாவிய சவால்கள் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிா்ந்துகொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் பங்கேற்கிறாா்கள். ரஷ்யா, ஈரான், அவுஸ்ரேலியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சா்கள் பங்கேற்கிறாா்கள்.

சா்வதேச வா்த்தகம் தொடா்பான விவாதம், அரசியல், பொருளாதாரம், இராணுவ வலிமை, சா்வதேச வளா்ச்சி ஆகியவற்றை நிா்ணயிப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு என 5 தலைப்புகளில் 80க்கும் மேற்பட்ட அமா்வுகளில் விவாதம் நடைபெறவுள்ளது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy