தனியார் கார்கள் பேர்மிங்கம் நகர மையப் பகுதியில் செல்லத் தடை

by Author
62 views

வளி மாசுறுதலைக் குறைக்கும் திட்டத்தின் கீழ் தனியார் கார்கள் பேர்மிங்கம் நகர மையப் பகுதியில் செல்லத் தடை விதிக்கப்படவுள்ளது.

வாகனங்கள் நகரத்திற்குள் செல்ல முடியும் என்றும் எனினும் மற்றப் பகுதிகளை அணுக மீண்டும் சுற்றுப்பாதை வழியே செல்ல வேண்டும்.

நகர சபையினால் புதிதாக வெளியிடப்பட்ட போக்குவரத்துத் திட்டத்தில் A38 மற்றும் குடியிருப்புவீதிகளில் 20mph வேகத்தில் வாகனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுப்போக்குவரத்து, நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பாவனை ஆகியவற்றின் அதிக பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்புவதாகவும் நகரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுத்தமான காற்றின் தரத்தைப் பேண இறுதி எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள அதேவேளை இந்த ஆண்டு ஒரு சுத்தமான காற்று மண்டலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே எந்தவொரு தனியார் வாகனங்களும் நகர மையத்தின் வழியாக பயணிக்க முடியாது என்றும் சில பகுதிகளிலிருந்து மட்டுமே வெளியே வரமுடியும் என்றும் பேர்மிங்கம் நகர சபை கூறியுள்ளது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy