திருமணம் ஆகி 32 ஆண்டுகள் கணவன் இருந்தும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்? விஜயசாந்தி வெளியிட்ட நெகிழ்ச்சி காரணம்

by Web Designer
196 views

13 ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை விஜயசாந்தி அளித்த பேட்டியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் 20,25  ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் நடிகை விஜயசாந்தி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக வலம் வந்தார்.

இந்நிலையில் திடீரென்று சினிமாவில் இருந்து தன்னுடைய பாதையை அரசியலுக்கு மாற்றிக்கொண்டார். முற்றிலுமாக சினிமாவை விடுத்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு ஹீரோவான மகேஷ் பாபுவின் திரைப்படத்தில் அவருடைய அம்மாவாக நடித்திருக்கிறார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னை நடிக்க வைக்க பலர் பெரும் முயற்சி செய்து வந்தனர். ஆனால் நல்ல கதைகள் அமைந்தால் நான் வாய்ப்புகளை ஏற்கவில்லை. தற்போது மகேஷ்பாபுவின் திரைப்படத்தில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளதால் நான் நடித்தேன்.

எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் குழந்தைகளை பெற்றுக்கொண்டால் சுயநலம் வந்துவிடும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள் பொதுநல தொண்டு சிறப்பாக செய்ய இயன்றது.

முற்காலங்களில் நடிகைகளுக்கு உடை மாற்றுவதற்கு என்று தனி அறை கிடையாது. நாங்கள் எங்களுடைய காரிலேயே உடையை மாற்றிக்கொண்டோம். சரியாக காற்று வரவில்லை என்றால் பனையோலை விசிறிகளை கொடுப்பார்கள். ஆனால் இன்றைய சூழல் அப்படியில்லை. அனைத்து வசதிகளும் கொண்ட கேரவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது” என்று பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy