இந்தியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி மலேசியாவுக்கு சுற்றுலா செல்ல விசா தேவையில்லை!

by Web Designer
305 views

இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலேசிய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலேசியாவுக்கு சுற்றுலா செல்ல இலவச விசா வழங்குவது குறித்து மலேசிய அரசு நீண்ட நாட்களாகவே பரிசீலித்து வந்தது. இந்நிலையில் விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டில் 15 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று மலேசிய அரசு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்திக்கொள்ள மலேசியாவுக்கு வரும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்களது பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு பெயர் பதிவு செய்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் மலேசியாவுக்கு சுற்றுலா செல்லலாம். விசா இல்லையே தவிர மற்றப்படி சுற்றுலா பயணிகள் பயணச்சீட்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 26 வரை அமலில் இருக்கும். ஒருமுறை பயணம் மேற்கொள்வர், 45 நாட்கள் கழித்த பிறகே மலேசியாவுக்கு மீண்டும் செல்ல முடியும் என்பது குறிப்பிடதக்கது.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy