உங்களுக்கு எல்லாம் எதுக்கு மீசை மனைவி கேட்ட கேள்வியால் நடிகர் விஜய் எடுத்த முடிவு

by admin
176 views

உச்ச நட்சத்திரத்தின் மீசையை எடுக்கக்கூறி அவருடைய மனைவி கூறியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் உச்சநட்சத்திரங்களுள் ஒருவர் இளையதளபதி விஜய். இவர் தற்போது கைதி திரைப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் “மாஸ்டர்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் இந்த திரைப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” புகைப்படம் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பானது தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள சிமோகா மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. இங்கு சமீபத்தில் சிறைச்சாலை அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த காட்சிகளில் இளைய தளபதி விஜய் மீசையின்றி நடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்க்கு நெருக்கமானவர்கள் இதுபற்றி கூறுகையில், “முதலில் இளையதளபதி விஜய் மீசையை எடுக்க ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் அவருடைய மனைவியான சங்கீதா வற்புறுத்தியதன் காரணமாக அவர் மீசையை எடுத்துவிட்டார்” என் று கூறினார். சினிமாவின் அடைக்கப்பட பள்ளிபாளையம் சென்னை புறநகரான பனையூரில் நடைபெறவுள்ளது.

இந்த படமானது நிச்சயமாக இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் அமைந்திருக்கும் என்று படக்குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy