ஆணாக பிறந்து 18 வயதில் பெண்ணாக மாறிய இளைஞர்! திருநங்கை வாழ்வில் இவ்வளவு சோகமா?

by admin
109 views

பலகுரல் பாடகர் சாக்‌ஷி ஹரேந்திரன் சிங்கப்பூரை சேர்ந்தவர்.வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை கடந்து தான் தற்போது வெற்றிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

சாக்‌ஷி 5 வயதிலேயே பாலியல் கொடுமைகளை அனுபவித்துள்ளதாக நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணாக பிறந்த இவர் 18 வயதில் பெண்ணாக மாறியுள்ளார். சமூகத்தில் தனக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் பல போராட்டங்களை சந்தித்துள்ளார்.

இதேவேளை, இவர் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு போட்டாத்திற்கும் துணையாக பெற்றோர் இருந்துள்ளனர்.

தற்போது, திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். பாடல், நடிப்பு, நடனம் என்ற பல திறமைகளை கொண்ட ஒருவராக சிறந்து விளங்குகிறார்.

முயற்சி செய்தால் முடியாது என்பது இல்லை என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டாக இன்று சாக்‌ஷி ஹரேந்திரன் உள்ளார்.

போராட துடிக்கும் ஒவ்வொரு திருநங்கைகளுக்கும் இவர் ஒரு எடுத்து காட்டாகவே தற்போது மாறியுள்ளார்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy