பெண்களே! உங்களை சிக்கென காட்டும் பிராவில் இதையெல்லாம் கவனித்ததுண்டா?

by Web Designer
178 views

பெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா தான் பெண்களின் உடலை நல்ல வடிவமைப்புடனும் கவர்ச்சியாகவும் காட்டும். அந்த பிரா எப்போது பொலிவை இழக்கிறதோ அப்போது பெண்களின் உடல் அழகும் பொலிவிழக்கத் தொடங்கும்.

பார்த்துப் பார்த்து அழகாக பிராக்களை வாங்கினால் மட்டுமே போதாது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். சிலருக்கு தங்களுடைய பிராக்களை எப்போது தூக்கி எறிந்துவிட்டு, புதியதை மாற்ற வேண்டுமெனத் தெரியாது.

சிலர் தங்கள் மனசுக்குப் பிடித்த உள்ளாடையை தூக்கி கடாசுவதற்கு அவ்வளவு எளிதாக மனது வராது. அது முழுக்க முழுக்க தவறான விஷயம். அடுத்து புதிதாக வாங்கும் ஏதேனும் ஒன்றை நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒன்றாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

பிரா விஷயத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெறும் அழகு சார்ந்த விஷயமல்ல அது. ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அஜாக்கிரதையாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல ஆரோக்கிய பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

**நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவது போல, நிச்சயம் 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்கள் பழைய பிராக்களைத் தூக்கியெறிந்துவிட்டு புதிய பிராக்களை வாங்குங்கள்.

**மெட்டல் ஹூக் உள்ள பிராக்களை 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தினால், அது சருமத்தில் உராய்ந்து அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.

**ஃபிட்டான பிராக்களை அணிவது மிக முக்கியம். அது உங்கள் வடிவழகை கூட்டும். தளர்வான, ஃபிட் இல்லாத பிராக்கள் உங்கள் உடல் வடிவைக் கெடுப்பதுடன் மார்புகளை மிக அதிகமாகத் தளர்வாக்கிவிடும்.

**நன்கு கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், நிச்சயம் உங்களின் பிராக்களின் கப் சைஸ் ஒரு வருடத்துக்கு ஆறு முறையாவது மாற்றமடையும். அதனால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது உங்களுடைய மார்பளவை அளவெடுத்து, அதற்கேற்றாற் போல் பிராக்களை அணிந்திடுங்கள்.

**அளவுக்கு அதிகமாக இறுக்கமுடைய பிராக்களை அணிந்தால் வியர்வை வெளியேற முடியாமல் போகும். இதனால் பாக்டீரியா தொற்றுக்களை உண்டாகும்.

**பிராக்களின் தோள் பட்டையில் உள்ள ஸ்ட்ரிப் லேசாக தளர்ந்தாலும் உங்களுடைய அளவில் மாற்றம் உண்டாகும். மார்பகம் தளர்ந்து போகும். அதனால் ஸ்ட்ரிப் தளர ஆரம்பிப்பது உங்களுடைய பிராக்களை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டியதற்கான அறிகுறிகளில் ஒன்று.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy