குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசயமான டிப்ஸ்!

by Web Designer
174 views

குளிர்காலம் வந்தால் எளிதில் தொற்று நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். காற்றில் வழக்கமான நாட்களைவிட குளிர்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்.எல்லோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும்.கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடல் நலத்தோடு சேர்த்து வயிற்றில் வளரும் குழந்தையின் நலத்தையும் பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பு இருக்கிறது.அவர்களுக்கான எளிய டிப்ஸ்.

உணவு முறை:

கர்ப்பிணி பெண்கள் சத்தான பழங்களையும் காய் கறிகள், சூப்புகள், ஜூஸ்கள், போன்றவற்றை குடித்து கொண்டு உடலினை நன்கு ஹைட்ரேட் செய்துகொள்ள வேண்டும்.சத்து நிரம்பிய பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும் இதனுடன் தினமும் நெல்லிக்கனியை சாப்பிடுவது மிகவும் நல்லது.கீரை வகைகளான வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றுடன் க்ரீன் ஆணியன்ஸையும் சேர்த்துக்கொள்ளுதல் உங்களின் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தும். குளிர்பானங்ளையும்,டீ, காபி போன்றவற்றை தவிர்த்தல் நன்று.

சரும பாதுகாப்பு:

கர்ப்பிணிகள் உடலினை காப்பதுடனும் தங்கள் சருமத்தையும் காக்க வேண்டும். சருமம் ஈரப்பதத்தை இழக்காதவாறு லோஷன்கள், கிரீம்கள் தடவுவது நல்லது. உங்கள் வயிறு வளருவதால் உங்கள் சருமத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வரும், அப்போது சருமம் ஈரப்பதமின்மையால் வலி உண்டாகும். அதனால் எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்வது நல்லது.இப்படி கர்ப்பகாலத்தில் செய்தால் பிற்காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் நீக்குவது சற்று எளிதாகிடும்.

குளிர்காலத்தில், ரத்த ஓட்டம் சற்று குறைவாகவே இருக்கும் அதனால் பாதங்களில் வலி மட்டும் வீக்கம் உண்டாக வாய்ப்புள்ளது இதனை தடுக்க கால்களில் சாக்ஸ் அணிந்தும் சற்று வெதுவெதுபாக வைத்து கொள்ள வேண்டும் இப்படி செய்வதால் பாத வலி குறையும் .கால்களில் ஏற்படும் வீக்கத்திற்கு சுடு தண்ணீரில் கால்களை சிறிது நேரம் வைத்தால் அது உங்கள் கால்களுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.

கர்ப்பகாலத்தில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு சென்று முடி திருத்தும், முடி ஸ்ட்ரைட்னிங், கலரிங், செய்தல் கூடாது. இவைகளில் இருக்கும் ரசாயனங்கள் குழந்தையை பாதிக்கும். மேலும் லெட் கலந்திருக்கும் பொருளுக்கு உங்களை நீங்கள் உட்படுத்திக்கொண்டால் அது குழந்தையை மிகவும் பாதிக்கும். லெட் மிகவும் ஆபத்தானது அது குழந்தைக்கு விஷமாகவும் மாறும் கொடிய ரசாயனம். ஆகவே கர்ப்ப காலத்தில் இப்படி எதையும் செய்யாமல் இயற்கை வழியில் நடப்பது குழந்தையின் நலனுக்கு மிகவும் அவசியம்.

ஆகவே, கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்களின் உடல்நலத்துடன் சரும பாதுகாப்பையும் சீராக பாதுகாத்தல் குழந்தைக்கு நன்மையும் பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனும் பிறக்கும்!

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy