கோயிலை காவல் காக்கும் முதலை! 150 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் அதிசயம்

by Web Designer
196 views

ஒவ்வொரு கோயில்களுக்கும் ஏதாவது ஒரு தனி சிறப்பு ஒன்று இருக்கும். அந்த தனித்துவமே அந்த கோயில், மக்களிடையே பிரசித்திப் பெற காரணமாக அமைவதும் உண்டு.

அந்த வகையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள அனந்தபுரா கோயிலும் பிரசித்திப் பெற்ற ஒன்று. இந்த கோயிலில் என்ன தனித்துவம் இருக்கிறது என முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

கேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில், அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது.

அனந்தபுரா கோயில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதோடு பிரதான கோயிலை சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பச்சைப் பசேல் என்று இருக்கும் இந்த கோயில் குளத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை ஒன்று வாழ்ந்து வருகிறது. இதை அங்குள்ள மக்கள் பபியா என பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இந்த முதலை கோயிலின் பாதுகாவலாக கருதப்படுவதோடு, பக்தர்களால் மிகவும் மரியாதைக்குரிய பிராணியாகவும் மதிக்கப்படுகிறது.

அதோடு இந்த முதலை இறந்து போனாலும், அதன் இடத்தில் கோயிலை பாதுகாக்க மற்றொரு முதலை இந்த ஏரிக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது.

இதில் என்ன விசேஷம் என்றால், பொதுவாக முதலை இனமானது அசைவ வகையைச் சார்ந்தது. ஆனால், இந்த முதலையோ குளத்தில் உள்ள மீன்களைக்கூட சாப்பிடாது.

இந்த முதலைக்கு கோயில் குருக்கள், உச்சிக்கால பூஜையின் போது சாதம் வெல்லம் கலந்த உருண்டைகளை சாப்பிடக் கொடுக்கிறார். இதற்கு முசலி நைவேத்யா என்கிறார்கள்.

கோயில் குளத்தில் குளிக்க வரும் பக்தர்கள் மற்றும் குருக்கள்களை இதுவரை பபியா தாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரியாக பிரசாதம் வழங்கப்படும் வேளைகளில் இந்த முதலை குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட முதலையை இந்தக் குளத்தில் எவரும் கண்டதில்லை.

ஒரு முதலை இறந்து விடுமேயானால், மறுதினமே இன்னொரு முதலை தென்படுமாம். அருகில் வேறு ஆறுகளோ, குளங்களோ இல்லாத நிலையில் எப்படி இந்தக் கோயில் குளத்திற்குள் முதலை வந்தது என்பது எவருக்கும் புதியாத புதிர் என்கிறார்கள்

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy