எப்படியான மைதானமாக இருந்தாலும், சிக்ஸர் விளாசும் திறமை என்னிடம் உள்ளது: ஷிவம் டுபே

by SL1234-A
114 views

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது ரி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடி 30 பந்தில் 54 ஓட்டங்களை விளாசிய இந்திய வீரர் ஷிவம் டுபே, எப்படியான மைதானத்திலும் ஆறு ஓட்டங்களை பெறும் திறமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ரி-20 கிரிக்கெட் போட்டியில் ஷிவம் டுபே 3-வது வீரராக களம் இறக்கப்பட்டார். அணித்தலைவர் விராட் கோலி அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வீணடிக்காமல் ஓட்டங்களை குவித்தார்.

ஆனால் ஷிவம் டுபே அளித்த உத்வேகத்தை ஏனைய வீரர்கள் சரியாக பயன்படுத்தாததால் இந்தியாவால் 170 ஓட்டங்களையே பெற முடிந்தது.

மைதானம் மிகப்பெரிய அளவில் இருந்த போதிலும் எளிதாக சிக்சர்கள் விளாசிய அவர், அதுதான் தன்னுடைய பலம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷிவம் டுபே கூறுகையில் ‘‘3-வது இடத்தில் களம் இறங்கி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாகும். எனக்கு சற்று நெருக்கடி இருந்தது. ரோகித் சர்மா என்னிடம் வந்து, உன்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடு என்றார், இது என்னை நிதானமாக விளையாட உதவியது.

ஒரு சிக்ஸ் அடித்த பின்னர், நான் உத்வேகத்தை பெற்றேன். அதன்பின் என்னுடைய வழக்கமான ஆட்டத்தை வௌிப்படுத்த ஆரம்பித்தேன். எந்தவொரு மைதானத்திலும் சிக்ஸ் அடிக்க முடியும் என்ற எனது திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பேன். அதுதான் என்னுடைய பலம்.

திருவனந்தபுரம் மைதானம் கொஞ்சம் பெரியதாக இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால், எந்தவொரு மைதானத்திலும் சிக்ஸ் அடிக்கும் திறமை என்னிடம் உள்ளது. அதுதான் என்னுடைய பலம். எப்போதும் இந்த எண்ணத்தோடுதான் செல்வேன்.

பிடிகளை தவற விட்டதுதான் போட்டியின் பின்னடைவுக்கு முக்கியமான காரணம். போட்டியின் ஒரு அங்கம்தான் அது. அவர்களும் சில பிடிகளை தவறவிட்டனர். நாங்கள் சிறந்த ஓட்ட எண்ணிக்கையைதான் பெற்றோம்.

ஆனால் வாய்ப்பை தவற விட்டுவிட்டோம். சிறந்த அணி என்பதால் தொடரை வெல்வதற்கான உத்வேகத்திற்கு திரும்புவோம்’’ என்று குறிப்பிட்டார்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy