வேலைக்கு செல்லும் பெண்கள் சருமத்தை பராமரிப்பதற்கான வழிமுறைகள்

by Gokila Suresh
140 views

வேலைக்கு செல்லும் பெண்கள் நேரமின்மை காரணமாக சரும பராமரிப்பில் போதிய கவனம் செலுத்துவதில்லை. பணியில் எதிர்கொள்ளும் நெருக்கடி, அதனால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவைகளும் சருமத்தை பாதிக்கும். மேலும் சுற்றுச்சூழல் மாசு போன்ற வெளிப்புற காரணிகளும் அவர்களுக்கு சரும பாதிப்பை அதிகப்படுத்தும்.

அலுவலக வேலை மட்டுமின்றி வீட்டு வேலைகளும் நெருக்கடி தரும்போது பெண்களுக்கு சரும பராமரிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் வேலைக்கு செல்லும் பெண்கள் சருமத்தை பராமரிப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் இரண்டு முறை முகம் கழுவ வேண்டும். அது சருமத்தில் உள்ள அசுத்தங்களை அகற்ற உதவும். அத்துடன் சருமம் தெளிவாகவும், பளபளப்பாகவும் இருக்க வழிவகை செய்யும்.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப நீண்ட தூரம் பயணிக்கும் பெண்கள், பணி நிமித்தமாக தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பெண்கள் போன்றவர்கள் சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாசுபட்ட காற்று, புழுதி, வியர்வை காரணமாக சருமத்தில் அழுக்கு படிந்திருக்கும். இறந்த செல்களும் நீங்காமல் சருமத்தில் குடிகொண்டிருக்கும். அவற்றை நீக்குவதற்கு அதற்குரிய கிரீம் வகைகளை சருமத்தில் தேய்த்து கழுவுவது நல்லது. அதன் மூலம் அழுக்கு, அசுத்தங்கள் நீக்கப்பட்டு சருமம் பளிச்சென்று ஒளிரும்.

சரியான மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது மிருதுவான, ஆரோக்கியமான சரும பராமரிப்புக்கு உதவும். காலையிலும், இரவிலும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது நல்லது. அதன் மூலம் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும். மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். சருமத்திற்கு பொருத்தமான மாஸ்சரைசரை தேர்ந்தெடுப்பது கவனிக்கத் தகுந்தது.

வேலைக்கு செல்லும் பெண்கள் இரவில் படுக்க செல்லும்போது சருமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் மேக்கப் போட்டிருந்தால் அதனை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் அது சருமத்திற்கு சோர்வையும், மந்த உணர்வையும் ஏற்படுத்திவிடும்.

சரும பராமரிப்புக்கு இரவு நேர கிரீம்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது சேதமடைந்த செல்கள் சீராகிவிடும். சரும செல்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். காலையில் சருமம் பொலிவுடன் காட்சி தரும்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy