திருமணமாகாத ஆண் பெண் ஒரே அறையில் தங்குவது தப்பில்லை…சென்னை உயர் நீதிமன்றம் !

by Web Designer
129 views

வெளியூர்களிலிருந்து வருபவர்கள் தங்குவதற்கு விடுதிகள் சிறு மற்றும் பேர் நகரங்களில் அதிகமாகி வருகிறது. ஆன்லைன் மூலமாக விடுதிகள் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவை நவ இந்தியா பகுதியில் ஓயோ நிறுவனம் சார்பில் சர்வீஸ் அபார்ட்மென்ட்கள் வாடகைக்கு விடப்படுகின்றன.அங்கு திருமணமாகாத ஆண்களும் பெண்களும் தங்கினால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் புகார் அளித்தனர். அப்புகாரில், ‘ஏற்கனவே கோவையில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஓயோ நிறுவனத்தின் கலாச்சார சீரழிவு நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படும். உடனடியாக ஓயோ நிறுவனத்தின் சர்வீஸ் அபார்ட்மென்ட்க்கு சீல் வைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த அந்த விடுதிக்கு சீல் வைக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார்

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, திருமணமாகாத ஆண்களும் பெண்களும் தங்குவதாகப் பத்திரிகைகளில் வெளியான செய்தியை வைத்து ஓட்டல் மூடப்பட்டுள்ளது. அதாவது திருமணமாகாத ஆண்-பெண் தங்குகிறார்கள் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆண் பெண் ஒரே அறையில் தங்கினால் என்ன தவறு. இதை தவறு என்று சட்டம் சொல்லவில்லை. திருமணமாகாத ஆண் பெண் தம்பதியாக வாழ்ந்தால் கூட எந்தவித குற்றமும் இல்லை. இதுமட்டும் எப்படி குற்றமாகும். இந்த விடுதியின் அறையில் மதுபாட்டீல்கள் கிடைத்ததால் மட்டும் இவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. இதில் மாவட்ட நிர்வாகம் முறையான வழிமுறையைப் பின்பற்றவில்லை. இதனால் இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஓயோ நிறுவனத்தைத் திறக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy