யாராச்சு Non-Veg கேட்டா ஊரவிட்டு வெல்ல போங்க, இந்தியாவின் முதல் Vegetarian நகரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?!

by Web Designer
243 views

இந்தியர்களுக்குப் பிடித்த உணவுகளில் சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகள் மிக முக்கியமானது. பஞ்சாப், தென் தமிழகம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தினந்தினம் அசைவ உண்வுகள் இடம்பெறும். இந்நிலையில் இந்திய மாநிலங்கள் ஒன்றின் நகரத்தில் முழுமையாக அசைவ உணவை தடை செய்துள்ளனர். இந்தியாவில் வாழும் ஜெயின் சமூகத்தினர் யாரும் அசைவ உணவை சாப்பிடுவதில்லை.

இந்நிலையில் குஜராத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான பாலிடானாவில் ஜெயின் சமூகத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்த நகரத்தை சேர்ந்தவர்கள் அங்கு மிருகங்களைக் கொல்வதைப் பாவச்செயலாகக் கருதுகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டிற்கு முன்பு 200-க்கும் மேற்பட்ட ஜெயின் துறவிகள் இந்த நகரத்தில் அசைவ உணவை அனுமதிக்கக்கூடாது என்றும், மிருகங்களை வதைக்கக் கூடாது என்றும் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படிச் செய்யாவிட்டால் ஓவ்வொரு ஜெயின் துறவியும் இறப்போம் என்று கூறினார். இதனைக்கேட்டு அம்மாநில அரசு அஞ்சியது.

இதன்பின் போராட்டங்களின் எதிரொலியாளி அம்மாநில அரசு கடந்த 2014-ம் ஆண்டு இங்கு விலங்குகளைக் கொல்வது சட்டவிரோதமானது என்று அறிவித்தது. அதன்பின் பாலிடானா நகரத்தைச் சுற்றிலும் இருந்த 250 இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்தியா மட்டுமின்றி உலகின் முதல் சைவ நகரமாகப் பாலிடானா பெயர் பெற்றது. இங்கு இறைச்சி இல்லாவிட்டாலும் மாட்டுப் பால், நெய், வெண்ணெய் போன்றவை கிடைக்கிறது. அதேபோல இந்த நகரத்தில் வீடுகளைக் காட்டிலும் கோவில்களே அதிகமாக உள்ளது. இந்நகரத்திற்குக் கோவில் நகரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் சைவ பிரியர்களுக்கு இது ஒரு புனித நகரமாக விளங்குகிறது!

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy