மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு பிரசாதமாக வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பத்திரிகையாளரிடம் பேசிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.
திருமலை திருப்பதியில் லட்டு பிரசாதமாக வழங்குவதைப் போல மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோயிலிலும் லட்டுவை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதமாக வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்துள்ளார் . இந்தத் திட்டத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட லட்டு தயாரிக்கும் இயந்திரத்தை ரூபாய். 4 லட்சம் செலவு செய்து வட இந்தியாவிலிருந்து வரவழைத்துள்ளார்.
லட்டு தயாரிக்கும் இயந்திரம் தெற்கு ஆடிவீதி யானை மஹால் அருகே நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி சுமார் 2400 லட்டு முதல் 3000 லட்டு வரை ஒரு மணி நேரத்தில் தயாரித்து விடலாம்.
இதனை அடுத்து இந்த லட்டு வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தலைமைச் செயலக அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று காலை 10 மணி அளவில் துவங்கி வைத்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் உடன் இருந்தவர்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் . அதுமட்டுமில்லாமல் அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கும் லட்டு பிரசாதத்தை வழங்கியிருந்தார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய ஒரு சில வார்த்தைகள் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை பெரிதும் நெகிழ வைத்தது. அதாவது “இறைவன் அருளால் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்” என்று வாழ்த்தி அந்த லட்டு பிரசாதத்தை அங்கிருந்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அளித்த அதை பார்த்த பத்திரிக்கையாளர்கள் மனம் நெகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.