உங்கள் உள்ளங்கை மிருதுவாகனுமா? தினமும் சில நொடி செய்தால் போதுமே!

by Gokila Suresh
137 views

பொதுவாக சில பெண்களுக்கு வீட்டில் பாத்திரம் மற்றும் துணி துவைக்கும் சோப்புகளின் கடினத்தன்மையால் சருமம் கடினமாகியிருக்கும்.

அதுமட்டுமின்றி உள்ளங்கை சிலருக்கு வெடிப்பு, வறட்சி, அரிப்பு, கோடுகள், தோலுரிவது போன்றவை ஏற்படலாம்.

இதனை தவிர்க்க விலையுர்ந்த கிறீம்களை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • உள்ளங்கையில் போதிய ஈரப்பதம் இல்லாமல் போனால் சிலருக்கு வெடிப்புகள் தோன்றி, கறுப்பாக மாறிவிடும். அவர்கள் அடிக்கடி கைகளில் வாசலின் தடவிக் கொள்ளலாம்.
  • ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து நான்கு (அ) ஐந்து சொட்டுக்கள் ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை கைகளுக்கு பூசி, தேய்த்துக் கழுவுங்கள். இதனால் கைகள் மிருதுவாகும் .
  • 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடருடன் தயிர் கலந்து கை, உள்ளங்கை, விரல் இடுக்கில் பூசி, மிதமான வெந்நீரில் தேய்த்துக் கழுவுவதுடன், மறக்காமல் நெல்லிக்காய் ஜூஸ் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
  • பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சிய, வெதுவெதுப்பான பாலில் விரல்களை அமிழ்த்தி ஊறவிடலாம்.
  • பாதாம் பாலை கை, விரல், நகங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். நகம் வலுவடையும்.
  • நகங்களில் விழும் சின்ன அடி அல்லது பலமான அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் குறைவாகி இப்படி வெண் புள்ளிகள் வரலாம். நகத்தில் வெண்ணெய் அல்லது தயிர் தடவி வந்தால், ஓரிரு நாட்களிலேயே புள்ளிகள் மறைந்துவிடும்.
  • உள்ளங்கை, கையின் மேல் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி, தினமும் ஐந்து நிமிடங்கள் கைகளை மூடி மூடித் திறக்க, தோலின் சுருக்கங்கள் நீங்கி, தசைகள் விரியும்.
  • ஒரு எலுமிச்சம்பழத்தை உள்ளங் கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள். பஞ்சுபோல் உள்ளங்கை மிருதுவாக இருக்கும்.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy