மனைவிக்கு பாசிட்டிவ் ரிசல்ட்டா? கட்டாயம் 3 மாசம் லீவு போடுங்க!!!

by Web Designer
242 views

கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்களாக மாறுமாம். சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகுமாம், நான்கு எட்டாகுமாம். இப்படி எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகுமாம். இவை எல்லாமே “பெலோபியன்” குழாயில்தான் நடக்கும். ஐந்தாம் நாள் கருவானது பெலோபியன் குழாயில் இருந்து நகர்ந்து வந்து, கருப்பையில் வந்து உட்கார்ந்துகொள்ளும். முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு வாந்தி, குமட்டல் போன்ற மசக்கை அறிகுறிகள் இருக்கும்.

#1. கர்ப்பம் தரித்த 14-ஆம் நாளில் இருந்து மூன்றாவது மாதம் வரை தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு “எம்பிரியோ” என்று பெயர். மூன்றாவது மாதத்திற்கு பிறகு “பீட்டஸ்” என்று பெயர். கருவில் உள்ள குழந்தைக்கு முக்கியமான உறுப்புகள் எல்லாம் உருவாகிற தருணம் இது.

#2. இந்த நேரத்தில் தான் கர்ப்பிணிப் பெண் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மூன்று மாதத்துக்குப் பிறகு கருவைச் சுற்றி “ஆம்னியான்” எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும். நடப்பது, உட்கார்வது, படுப்பது என தாயின் உடல் அசைவுகளின் போது கருவில் உள்ள குழந்தை சிதையாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.

#3. ஆகவே ஒரு பெண் கர்ப்பமானது உறுதியானவுடன், அந்தத் தம்பதி தங்களின் செக்ஸ் நடவடிக்கைக்குத் தற்காலிகமாக லீவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். இந்த பதிவின் தலைப்பில் நான் சொன்ன லீவிற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளை தம்பதிகள் சந்திக்க நேரிடும்.

#4. மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம். முதல் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும்.

#Pregnancy – ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருத்தல், கர்ப்பக் காலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு, பிரசவத்துக்கு முன்பே கருப்பையின் வாசல் திறந்த நிலையில் இருப்பது, நஞ்சுக்கொடி கருப்பை வாசலுக்கு வந்துவிடுவது போன்ற பிரச்சனைகளை எதிர் கொண்டவர்கள் கர்ப்பக் காலத்தில் உடல் உறவில் ஈடுபடக் கூடாது மேலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியமான ஒன்று.

Related Posts

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy