இன்றைய ராசிபலன் (15-05-2023) …

by Lifestyle Editor
0 comment

மேஷம் :

உங்கள் காதல் வாழ்க்கையில் சந்தோஷமும் அன்பும் பொங்கி வழியும். உங்கள் உறவு நேர்மறையான பாதையில் செல்வதையே இது குறிக்கிறது. உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நீடித்து இருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வேலை மற்றும் நிதி சார்ந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் நீங்கள் நுழையப் போகிறீர்கள். வெற்றியை எட்டும் அனைத்து சக்தியும் உங்களுக்கு உண்டு. ஆனால், நிலையான கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். உங்கள் உடல் ஆரோக்கியம், வாழ்க்கை முறை மற்றும் நல்வாழ்வில் நெகிழ்ச்சி மற்றும் வலிமை தேவை. நீங்கள் தற்போது ஏதேனும் சவால்கள் அல்லது தடைகளை எதிர்கொண்டு இருக்கலாம். ஆனால், மன வலிமை உடன் இருந்து அதனை எதிர் கொண்டு முன்னேறிச் செல்வது தான் முக்கியம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு மயில் இறகு

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: இண்டிகோ

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் :

நீங்கள் ஒரு புதிய உறவை அல்லது ஏற்கனவே உள்ள ஒரு உறவை மேம்படுத்திக் கொண்டு இருக்கலாம். இந்த வாக்கு, வளர்ச்சி, கருவுறுதல் மற்றும் ஆற்றலை வளர்ப்பதைக் குறிக்கிறது. அதோடு, இது உங்களுக்கு நெருக்கமானவர்களுடனான உங்கள் உணர்ச்சி ரீதியான பிணைப்புகள் இன்னும் வலுவாக மாறுவதைக் குறிக்கிறது. இது செல்வம் மற்றும் மிகுதியை உணர்த்துகிறது. இது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிதி சார்ந்த வெற்றியை அனுபவிக்கப் போகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. நீங்கள் செலவு செய்வது குறித்து சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் புத்திசாலித்தனமான விதத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் சமநிலைப் படுத்த வேண்டி இருக்கும். இது உங்கள் உடல் மற்றும் மன நலனை ஆதரிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நிறுவுவதைக் குறிக்கிறது. பயணம் மேற்கொள்வது உங்கள் நெட்ஒர்க்கை மேம்படுத்து உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு ருத்திராக்ஷ கொட்டை

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: இளஞ் சிவப்பு

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 66

மிதுனம் :

உங்கள் உறவுக்கு தொடர்பு கொள்வது தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டும். எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும். உங்கள் ரொமான்டிக் பார்ட்னருடன் உன்னதமான மற்றும் ஆழமான இணைப்பில் இருப்பதன் நன்மையை இது உணர்த்துகிறது. உங்களுக்கு உங்கள் வேலையில் புதிய வாய்ப்புகள் மற்றும் யோசனைகள் கிட்டும். நீங்கள் செலவு செய்வதில் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் புத்திசாலித் தனமாக முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. புதிய இடங்களுக்கு செல்லுதல் அல்லது உள்ளூரில் உள்ள இடங்களைச் சென்று பார்ப்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கும். உங்கள் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை உருவாக்க இது உங்களை ஊக்குவிக்கிறது. அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு தனி செயல்திறன்

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 26

கடகம் :

இது நீங்கள் காதல் மற்றும் உறவுகள் தொடர்பான பயணத்தைத் தொடங்கலாம் என்று உணர்த்துகிறது. இது ஒரு புதிய உறவாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே இருக்கும் உறவில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகவோ அல்லது காதல் தொடர்பான சுய-கண்டுபிடிப்பின் தனிப்பட்ட ஒரு பயணமாகக் கூட இருக்கலாம். இது இயக்கம் மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. உங்கள் வேலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் இயற்கையான சுழற்சிகளை நீங்கள் நம்பி செயல்பட வேண்டும் என்றும் இது குறிக்கிறது. இது கூட்டாண்மை மற்றும் பரிசு வழங்குவதைக் குறிக்கிறது. இது உங்களைச் சுற்றி இருக்கும் ஆதரவு நல்கும் உறவுகள் உங்கள் நல்வாழ்வுக்கு நன்மை பயக்கும் என்பதையும் குறிக்கிறது. புதிய நபர்களுடனும் அனுபவங்களுடனும் இணைவதற்கான வாய்ப்பை வழங்கும் பயணம் செய்யும் சந்தர்ப்பம் உங்களைத் தேடி வரும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு புதிய அறிமுகம்

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி நிறம்

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 17

சிம்மம் :

இது வெற்றியையும் சாதனையையும் குறிக்கிறது. அதாவது உங்களின் உறவுகள் மேம்படும் என்பதை இது குறிக்கிறது. இது உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தெளிவாகவும் நேர்மையாகவும் தொடர்பு கொள்ள உங்களை ஊக்குவிக்கிறது. மேலும், இது கருவுறுதல் மற்றும் வளர்ச்சியைக் உணர்த்துகிறது. உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்றும் இது பரிந்துரை செய்கிறது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் நீங்கள் சற்று பொறுமையாகவும் விடாமுயற்சியுடன் மனம் தளராமல் செயல்பட வேண்டும் என்பதை இது குறிக்கிறது. பயணம் மேற்கொள்வது உங்களுக்கு வேலை தொடர்பான வாய்ப்புகள் வருவதை அதிகப்படுத்தலாம். உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக் கொள்ள, நீங்கள் தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இது உங்களை ஊக்குவிக்கிறது. அக்கம் பக்கத்தில் நடக்கும் சிறு சிறு திருட்டுகள் குறித்து நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு மேசையில் வைக்கக் கூடிய நாட்காட்டி

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 25

கன்னி :

இது பார்ட்னர்ஷிப் மற்றும் பேலன்ஸ் குறித்து பேசுகிறது. உங்கள் உறவுகளில் நல்லிணக்கம் மற்றும் பிணைப்பு மேம்படும் கால கட்டத்திற்குள் நீங்கள் நுழைவதை இது அறிவுறுத்துகிறது. கருத்து வேறுபாடு உள்ள இரண்டு நபர்களுக்கு இடையில் சமரசம் செய்து வைத்து வாதத்தை முற்றுப் பெறச் செய்ய நீங்கள் அழைக்கப்படலாம். இது பயணம் மற்றும் இயக்கத்தைக் குறிக்கிறது. நீங்கள் முன்னரே செய்துள்ள உங்கள் பழைய முதலீடுகளில் இருந்து உங்களுக்கு தகுந்த பலன் கிடைக்கும் என்று இது அறிவுறுத்துகிறது. பயணம் அல்லது புதிய வாய்ப்புகளை தேடுவதன் மூலம் நீங்கள் பயன் பெறலாம். சமநிலை இருக்கச் செய்ய நீங்கள் சுய-பிரதிபலிப்பு மற்றும் உங்களை உற்று கவனித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். ஆன்மீக பயிற்சி அல்லது ஆன்மீக தேடலில் ஈடுபட்டவர் அல்லது ஆன்மீக குருவுடன் தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் பயன் பெறலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு விளக்கின் நிழல்

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: பீச் (peach) நிறம்

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 4

துலாம் :

நீங்கள் காதல் மற்றும் பிணைப்பிற்கு உங்கள் இதயத்தை திறந்து வைத்து இருப்பீர்கள். இது நீங்கள் மன்னிப்பு, இரக்கம் மற்றும் சுய அன்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இது போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொள்ள உதவும் வகையில் ஆன்மீகத்தை பயிற்சி செய்ய நீங்கள் ஈர்க்கப்படலாம். பிரபஞ்சத்தில் நம்பிக்கை வைக்கவும் மற்றவர்களிடத்தில் நன்றி உணர்வுடன் இருப்பதில் நீங்கள் சற்று கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வேலையில் புதிய வாய்ப்புகளையும் நிதி பாதுகாப்பையும் உணரலாம். உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான வழிகாட்டுதலைத் தேடி நீங்கள் ஓடிக் கொண்டு இருக்கலாம்.

மேலும், இது ஆன்மீக வழிகாட்டிகள் மற்றும் தேவதூதர்களிடமிருந்து தக்க ஆதரவையும் உதவியையும் பெறுவீர்கள் என்பதை அறிவுறுத்துகிறது. உங்களுக்கு அதிக உரிமை இருப்பதாகவும் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதற்கு உத்வேகம் இருப்பதாகவும் உணர்வீர்கள். உங்கள் கம்ஃபர்ட் சோனில் இருந்து வெளியே வந்து ரிஸ்க் எடுக்க உங்களை இது ஊக்குவிக்கிறது. உங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்து நீங்கள் ஆர்வம் மிக்கவராக உணரக் கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: கருத்தியலான ஓவியம்

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 18

விருச்சிகம் :

வலுவான மற்றும் நம்பகமான உறவுகளை வளர்ப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது நம்பிக்கை மற்றும் உண்மைத் தன்மையைக் குறிக்கிறது. மற்றவர்களுடன் நீங்கள் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை வளர்த்துக்கொள்வதையே இது உணர்த்துகிறது. இந்த வாக்கு, அறிவு மற்றும் வழிக்காட்டுதலைக் குறிக்கிறது. உங்கள் வேலையில் நீங்கள் முன்னேறிச் செல்ல புதிய படிப்புகள் அல்லது ஆசிரியர்களின் உதவியை நாடலாம். வெற்றியை எட்ட நீங்கள் மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்திக் கொள்ள நீங்கள் உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் கவனமாக இருக்க வேண்டும். இது புதிய அனுபவங்களின் தேடலில் புது இடங்களுக்கு ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம் என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு ஃபுளோரல் டிசைன்

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம் (cyan)

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 8

தனுசு :

உங்கள் அன்புக்கு உரியவர்கள் உடன் உங்கள் உறவை ஆழமாக்க, உணர்வு ரீதியாக பிண்ணிப் பிணைந்து இருக்க நீங்கள் மனதை திறந்து வைத்து இருக்க வேண்டும். புது விதமான கிரியேட்டிவ் வேலைப்பாடுகளில் நீங்கள் ஆர்வம் காட்டலாம். உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறும் வகையில் நீங்கள் புதிய வாய்ப்புகளைப் பெற புது விதமாக யோசிக்க வேண்டி இருக்கும். நீங்கள் உங்கள் உள் உணர்வு சொல்வதை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நீங்கள் உங்கள் உள்ளுணர்வை நம்ப வேண்டும். சுய-விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். புதிய அனுபவங்கள் மூலம் வளர்ச்சி கிட்டும். இது உங்கள் கம்ஃபர்ட் சோனில் இருந்து வெளியே வந்து தெரியாததை கற்றுக் கொள்ள உங்களை ஊக்குவிக்கும். புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உங்களைத் தேடி வரும். இது உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு தேக்கு மரத்தால் ஆன மேசை

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ (saffron) ஆரஞ்சு

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 77

மகரம் :

நீங்கள் புதிய ரொமான்டிக் ஆன உறவுக்கு தயாராக இருக்கலாம் அல்லது உங்கள் தற்போதைய உறவில் அதிக அர்ப்பணிப்பு இருக்கலாம். நீங்கள் காதலுக்கு மனம் திறந்து உங்களுக்கு இந்த பிரபஞ்சம் சரியான ஒரு ஆளைத் தான் கொடுத்துள்ளது என்று நம்ப வேண்டும். உங்கள் லட்சியம் நோக்கி செல்வதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் உங்கள் சொந்த திறனில் நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் துறையில் உள்ளவர்களின் வழிக்காட்டுதல் மூலம் உங்களுக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீது சந்தேகம் அல்லது பாதுகாப்பின்மை காரணமாக போராடித் தவிக்கலாம். சுய-அன்புடன் இருங்கள். உங்களுக்கு நெருங்கியவர்கள் அல்லது ஆன்மீக வழிக்காட்டுதல் வழங்குபவர்களின் ஆதரவு உங்களுக்கு பலன் அளிக்கும். ஓய்வு பெற உங்களுக்கு பயணம் நன்மை பயக்கும். நீங்கள் உங்களை பராமரித்துக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் உங்கள் உடல், மன மற்றும் உணர்வு சார்ந்த நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு பெரிய காபி கோப்பை

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: கிரீம் (cream) நிறம்

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 22

கும்பம் :

உங்கள் ரொமான்டிக் உறவில் ஆழமான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு நிலவும். உங்கள் உறவுகள் மீது நம்பிக்கை வையுங்கள். அன்பின் சக்தி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இது தன்னம்பிக்கையைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றி உங்களைத் தேடி வரும். ஆனால், சில சமயங்களில் சுய சந்தேகம், அதாவது உங்கள் திறன்களில் உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போகலாம். நீங்கள் உங்களை கவனித்து கொள்வதை புறக்கணிக்கிறீர்கள். அதனால், நீங்கள் உங்கள் சொந்த தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும். பயணம் மேற்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். சரியான ஓய்வு பெற மற்றும் புத்துணர்ச்சி அடைய இது உதவியாக இருக்கும். உங்கள் அன்றாட வழக்கத்திலிருந்து நீங்கள் சற்று ஓய்வு எடுக்க வேண்டும். அதோடு, உங்களை கவனித்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு மணி பிளாண்ட் (money plant)

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 45

மீனம் :

காதல் மற்றும் ரொமான்ஸ் கைக்கூடி வரும். நீங்கள் ஒரு புதிய உறவு அல்லது ஏற்கனவே உள்ள உறவை மேம்படுத்தலாம். இந்த பிரபஞ்சம் உங்கள் இதயத்தில் அன்பைப் பொங்கச் செய்யும். உங்கள் வேலையில் நீங்கள் ஒரு சில சவால்களை எதிர் கொள்ள நேரலாம். ஆனால், அதனை எல்லாம் சரி செய்து வெற்றியை எட்ட உங்களுக்கு தகுந்த ஆதரவும் உதவியும் கிட்டும். நீங்கள் கடுமையான சூழலை எதிர் கொள்ள நேரலாம். ஆனால், அதனை எதிர் கொள்ளும் வலிமையைப் பெறுவீர்கள். ஏதேனும் புதிய சாகச பயணத்தை மேற்கொள்ள நேரலாம். பயணம் கண்டிப்பாக மாற்றத்தை உண்டு செய்து உங்களுக்கு பலன் தரும். நீங்கள் இதன் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட குறியீடு: ஒரு தரையில் படரும் செடி

உங்களுக்கான அதிர்ஷ்ட நிறம்: டார்கான சாம்பல் நிறம்

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 3

Related Posts

Leave a Comment