மீனாட்சிக்கு உதவ வந்த வெற்றி – மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்..!

by Column Editor
0 comment

மீனாட்சிக்கு உதவ வந்த வெற்றி, புஷ்பாவை அவமானப்படுத்தி ஓடவிட்ட சக்தி மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. நேற்றைய எபிசோடில் சங்கிலி சக்தி திட்டிய விஷயத்தை போட்டுக் கொடுக்க புஷ்பா அவளிடம் சண்டை போட போகிறாள்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் புஷ்பா சக்தியின் எதிரே போய் கால் மேல் கால் போட்டு வெறுப்பேற்ற சக்தி கோபபட்டு சண்டை போட புஷ்பா அவமானப்பட்டு காலேஜ் ஃபீஸ் கூடக் கட்டாமல் ஓடி விடுகிறாள்.

அடுத்து மீனாட்சி மரத்தடி நாகம்மன் கோவிலுக்கு போயி சாமி கும்பிட அங்கு வெற்றி வந்து உங்களை ரங்கநாயகி வீட்டில் பார்த்தேன் என்றதும் மீனாட்சி ஷாக் ஆகி உனக்கு எப்படிபா தெரியும் என கேட்க அதற்கு வெற்றி நான் கடன் வாங்க வந்தேன் என பொய் சொல்கிறான்.

மேலும் நான் உங்களுக்கு உதவி செய்யட்டுமா என கேட்க மீனாட்சி மறுப்பு தெரிவித்து இரங்கநாயகி பற்றியும் அங்கு நடந்த விசயத்தை பற்றியும் பெருமையாக சொல்லி கொண்டிருக்கிறாள்.

இந்த பக்கம் வீட்டில் பீரோவை திறக்கும் சக்தி ஒரு புது சேலையை பார்த்து யமுனாவிடம் இது எப்படி வந்தது என விசாரிக்க யமுனா அம்மாவுக்கு மெஸ்க்கு வரும் ஒருவர் கொடுத்தார் என சொல்கிறாள். அடுத்தபடியாக சக்தி கோவிலில் வெற்றியிடம் பேசிக்கொண்டிருக்கும் அம்மாவிடம் வந்து விசாரிக்க மீனாட்சி வெற்றி புடவை கொடுத்ததை சொல்கிறாள். இதை நான் கட்டமாட்டேன் உன் கையாலே சக்திக்கு கொடுத்துடுப்பா என்றதும் வெற்றி சந்தோஷப்படுகிறான்.

பிறகு இரங்கநாயகி வீட்டிற்கு பூஜா வந்து வெற்றியை பற்றி விசாரிக்கிறாள். மேலும் அவர் போன் பண்ணாலும் எடுக்கல, பேசினாலும் பேச மாட்டாரு என வருத்தப்பட இரங்கநாயகி சீக்கிரமே அவனை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்றேன் என வாக்கு கொடுக்கிறான்.

அதேநேரம் வெற்றி சக்திக்கு புடவை தர சக்தி அந்த புடவையை வாங்கிக் கொள்ள வெற்றி மிகுந்த சந்தோசம் அடைகிறான். நாளைக்கு நாள் வெற்றிக்கு சக்தி மீது காதல் வளர்ந்து கொண்டே போக இன்னொரு பக்கம் ரங்கநாயகி பூஜாவுக்கு கட்டி வைக்க வாக்கு கொடுக்க அடுத்து என்ன நடக்கப் போகிறது? வெற்றி சக்தியை எப்படி திருமணம் செய்யப் போகிறான் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment