அட இவரா! விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்!

by Column Editor
0 comment

பெரிய கேப்புக்கு பின்பு மீண்டும் சின்னத்திரையில் தினேஷ் கம்பேக் கொடுத்துள்ளார்.

விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் தினேஷ் . ஜிகே என்ற ரோலில் ஈரமான ரோஜவே 2 சீரியலில் தினேஷ் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரி ஆகியுள்ளார்.

விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பரப்பான சீரியல் ‘பிரிவோம் சந்திப்போம்’ . இந்த சீரியலின் மூலம் ரச்சிதா சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் நடித்தவர் நடிகர் தினேஷ். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவருக்குள் காதல் மலர்ந்தது. பின்பு இருவீட்டார் சம்மத்துடன் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது.

திருமணம் ஆன சில வருடங்கள் கழித்து சரவணன் – மீனாட்சி சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார் ரச்சிதா. தொடர்ந்து 2 சீசனிலும் இவரே மீனாட்சியாக நடித்து ஹிட் அடித்தார்.

அதே போல் அவரின் கணவர் தினேஷூம் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் பிஸியாக நடித்து வந்தார். அந்த சீரியல் அவருக்கு மிகப் பெரிய ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கியது. இடையில் வெள்ளித்திரையிலும் நடித்து வந்தார். பின்பு அந்த சீரியலில் இருந்து விலகிய தினேஷ் மனைவி ரச்சிதாவுடன் சேர்ந்து ’நாச்சியார்புரம்’ என்ற சீரியலில் நடித்தார். கொரோனா காரணமாக அந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. ரச்சிதா மீண்டும் விஜய் டிவி பக்கம் செல்ல அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் தினேஷ் நடிப்பதில் இருந்து சின்ன பிரேக் எடுத்து இருந்தார்.

இந்நிலையில் பெரிய கேப்புக்கு பின்பு மீண்டும் சின்னத்திரையில் தினேஷ் கம்பேக் கொடுத்துள்ளார். சன் டிவியில் விரைவில் டெலிகாஸ்ட் ஆகவுள்ள தொடரில் தினேஷ் லீட் ரோலில் நடிக்கிறார். இதுக் குறித்த தகவல் இணையத்தில் ஏற்கெனவே கசிந்து இருந்தது. இப்படி இருக்கையில் இப்போது விஜய் டிவி சீரியலிலும் தினேஷ் நடிக்க வந்துள்ளார்.

இளைஞர்களின் ஃபேவரெட் சீரியலான ஈரமான ரோஜாவே 2வில் ஜிகே என்ற ரோலில் தினேஷ் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரி ஆகியுள்ளார். நேற்றைய தினம் சீரியல் எபிசோடில் இவரது அறிமுகம் இருந்தது. கதைப்படி இவர் தான் பார்த்தி – காவ்யாவை சேர்த்து வைப்பார் என்ற தகவலும் கசிந்துள்ளன.

Related Posts

Leave a Comment