சூர்யாவை கொல்ல துணிந்த தாரா – மாரி சீரியல் அப்டேட்…

by Column Editor
0 comment

சூர்யாவை கொல்ல துணிந்த தாரா, மாரி சீரியலில் அடுத்து நடந்தது என்ன இன்றைய முழு எபிசோட் அப்டேட்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. நகை திருடி மாரியை அறைந்த அரவிந்த்தை சூர்யா மன்னிப்பு கேட்க சொன்னான்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் சூர்யா அரவிந்தை மாரியிடம் மன்னிப்பு கேட்க சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சி உன் மனைவி மாரி என்பதால் நீ மன்னிப்பு கேட்க சொல்கிறாய் என்று சங்கர பாண்டி கேட்க மனைவிக்காக இல்லை யாரையும் கை நீட்டி அடிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது மாரியை அடித்தது அரவிந்த் செய்த தவறு அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறான்.

இதனால் அரவிந்த் அனைவரும் முன்னாலும் கூனிக்குறுகி மாரியிடம் மன்னிப்பு கேட்க அரவிந்த் அவமானம் தாங்க முடியாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சி பண்ண தாரா வந்து காப்பாற்ற அசிங்கம் ஆயிடுச்சு என்று சொல்ல நீ ஏண்டா சாகணும் சாக வேண்டியது அந்த சூர்யா தான் இன்னைக்கு நைட்டே அவனுக்கு விஷம் வைத்து கொன்று சொத்து எல்லாம் உன் பெயருக்கு நான் மாற்ற வைக்கிறன் என்று தாரா சொல்கிறாள்.

பிறகு மாரி வீட்டில் அம்மனிடம் வேண்டியபடி இருக்க அப்போது தேவி தோன்றுகிறாள். தேவியை பார்த்து மாரி பயப்பட, தேவி பயப்படாத மாரி என் மகனுக்கு ஆபத்து போய் காப்பாற்று என்று சொல்ல மாரி அதிர்ச்சியாகிறாள்.

உடனே யார் சூர்யாவை கொலை செய்கிறாங்கள் என்று கேட்க தேவி அது உனக்கு தெரிந்தால் உன் உயிருக்கு ஆபத்தாக முடியும் அது வேண்டாம். உன் கடமை நீ சூர்யாவை காப்பாற்ற வேண்டும் என்பது போய் காப்பாற்று என்று சொல்லி அனுப்பி வைக்க இந்த பக்கம் தாரா பாலில் விஷம் கலந்து அதை சூர்யாவிடம் சென்று போய் கொடுக்கிறாள்.

சூர்யாவும் விஷம் கலந்திருப்பது தெரியாமல் குடிக்க போக வெளியே மாரி கதவை தட்ட யாருக்கும் கேட்காமல் இருக்க மாரி என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறாள். அடுத்து என்ன நடக்கப் போகிறது? மாரியை சூர்யா எப்படி காப்பாற்ற போகிறாள் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment