நிற்க போகுதா ஹரி, லட்சுமி கல்யாணம்? – புதுப்புது அர்த்தங்கள் சீரியல் அப்டேட்..!

by Column Editor
0 comment

தாத்தாவுக்கு தெரிய வரும் உண்மை.. நிற்க போகுதா ஹரி, லட்சுமி கல்யாணம் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் அடுத்து நடக்கப் போவது என்ன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள். ஆதிராவின் குழந்தைக்கு சந்தோஷ் தான் அப்பா என பிரதீபா பவித்ராவிடம் சொல்லி பூகம்பத்தை கிளப்ப இதனால் சந்தோஷ்க்கு DNA டெஸ்ட் எடுக்க அதில் சந்தோஷ் தான் குழந்தைக்கு அப்பா என தெரிய வந்தது.

இதனால் அனைவரும் அதிர்ச்சியடைய ஹரி இதெல்லாம் பிரதீபாவின் சதி திட்டம் என சொல்லி எல்லோரையும் நம்ப வைத்து சந்தோஷை காப்பாற்றினார்.

இதையடுத்து வரும் நாட்களில் சந்தோஷ் குறித்த உண்மை தாத்தாவுக்கு தெரிய வர அவர் பயங்கர கோபத்துடன் திருமணத்தை நிறுத்தி அனைவருக்கும் உண்மையை சொல்ல வருகிறார்.

அந்த நேரத்தில் அவர் தவறி விழுந்து அடிபட்டு விட அவரை மருத்துவமனையில் சேர்த்து மயக்க நிலையிலேயே வைக்கிறான் சந்தோஷ்.

அடுத்து குழந்தையை தூக்கி தனது நண்பரிடம் கொடுக்க முயல ஹரி அதனை தடுத்து விடுகிறார். இதனால் ஹரிக்கு சந்தோஷ் மீது சந்தேகம் வருகிறது.

மயக்க நிலையில் இருக்கும் தாத்தா எழுந்து வருவாரா? ஹரி, லட்சுமி கல்யாணம் நடக்குமா? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment