கன்னத்தீவா? டிரெண்டிங் தம்பதி ரவீந்தர்- மகாலட்சுமியின் விளக்கம் …

by Column Editor
0 comment

சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி, ரவீந்தரின் திருமணம் தான் கடந்த சில நாட்களாக டிரெண்டிங்கில் இருந்தது என்றால் அது மிகையாகாது.

திருமணம் முடிந்த கையோடு பல பேட்டிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர், இவர்கள் எங்கு சென்றாலும், எது பேசினாலும் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவிடுகிறது.

அந்த வகையில் இவர் கன்னித்தீவு செல்லவிருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் ரவீந்தர்.

கன்னித்தீவுச் செல்வது ஒரு வதந்தி:

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியெடுத்த ரவீந்தர், தான் கன்னித்தீவிற்கெல்லாம் செல்லவில்லையென்றும், திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களது திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியளிக்கிறது, திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமண நிகழ்வுகள் ஒளிபரப்பட்டன.

ஆனால் அந்நிறுவனம் பெறாத வருமானத்தை எங்களது திருமணம் பெற்றது பெருமையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment