போலி செய்திகளை பரப்பினால் கிரிமினல் வழக்கு – யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை…

by Column Editor
0 comment

இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டு தன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும் என மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் தவறான தகவல்கள் மற்றும் செய்திகளால் நாட்டின் இறையான்மை பாதிக்கப்படுவதோடு, மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. சமூக வலைதளங்களில் பலர் தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டை சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருவதால் தேவையில்லான பிரச்சினைகள் உண்டாகிறாது. மேலும் போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. இதில் பெரும்பாலான யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டது ஆகும். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இந்தநிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கி தன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Related Posts

Leave a Comment