அதிகரிக்கும் காய்ச்சல் : 6,000 சோதனைக் கருவிகளை வாங்க சுகாதாரத்துறை திட்டம்..

by Column Editor
0 comment

தமிழகத்தில் இதுவரை 1267 பேருக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் உறுதியாகியுள்ளதாகவும், மேலும் 6 ஆயிரம் சோதனைக் கருவிகளை வாங்க முடிவு செய்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஃப்ளூ காய்ச்சல் எனப்படும் எச்1என்1 இன்ஃப்ளுயன்ஸா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், திருவாரூர் உள்ளிட்டம் பெரும்பாலான மாவட்டங்களில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தைகள் வார்டுகள் வேகமாக நிரம்பத்தொடங்கின. மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள், இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நேற்று வரை தமிழகத்தில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு வந்த 5, 064 பேருக்கு எச்1என்1 பரிசோதனை பேற்கொள்ளப்பட்டதில், 1,267 பேருக்கு இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப சோதனை கருவிகளை வாங்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. ஆகையால், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் 6, 000 சோதனை கருவிகளை வாங்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்திருக்கிறது. அதன்படி அதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வருகிற 26 ஆம் தேதி திறக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் எனவும், பின்னர் 15 நாட்களில் அந்த நிறுவனங்கள் சோதனைக் கருவிகளை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment