ஊதா நிற தக்காளியில் இத்தனை நன்மைகளா..? நிபுணர்கள் சொல்வது என்ன.?

by Column Editor
0 comment

தக்காளியின் நிறத்திற்கு ஏற்றார் போல் அதில் உள்ள சத்துக்களின் அளவும் மாறுபடக்கூடும் எனக்கூறப்படுகிறது. குறிப்பாக செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் தக்காளிகளை விட, இயற்கையாக விளைவிக்கப்படும் தக்காளியில் சத்துக்கள் அதிகம் என்பது அனைவரும் நம்பக்கூடிய ஒன்று.

தக்காளியில் சிவப்பு நிறம் மட்டுமல்ல மஞ்சள், ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களும் உள்ளன. உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தக்காளி வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. சமைப்படாத ஒரு தக்காளியில் 91 மில்லிகிராம் வைட்டமின் ஏ, 17 மில்லி கிராம் பி1 மற்றும் பி2 வைட்டமின்கள், 9 மில்லி கிராம் வைட்டமின் சி, 2 மில்லி கிராம் சுண்ணாம்புச்சத்து ஆகியன அடங்கியுள்ளது.

தக்காளியின் நிறத்திற்கு ஏற்றார் போல் அதில் உள்ள சத்துக்களின் அளவும் மாறுபடக்கூடும் எனக்கூறப்படுகிறது. குறிப்பாக செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் தக்காளிகளை விட, இயற்கையாக விளைவிக்கப்படும் தக்காளியில் சத்துக்கள் அதிகம் என்பது அனைவரும் நம்பக்கூடிய ஒன்று. இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட ஊதா நிற தக்காளி இந்த கருத்துக்களை எல்லாம் தவிடுபொடியாக்கியுள்ளது.

ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழக பேராசிரியரும் பிரிட்டிஷ் உயிர்வேதியியல் நிபுணருமான கேத்தி மார்ட்டின், சிவப்பு நிற தக்காளிக்குப் பதிலாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஊதா நிற தக்காளியை உருவாக்கியுள்ளார். இந்த ஊதா தக்காளி வழக்கமான சிவப்பு நிறத்திற்கு மாறாக, நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதனை உட்கொள்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

இங்கிலாந்தின் நார்விச்சில் உள்ள ஜான் இன்னெஸ் மையத்தில் தனது ஆராய்ச்சியாளர்கள் குழுவுடன் இணைந்து பேராசிரியர் கேத்தி மார்ட்டின் ஊதா நிற தக்காளியை உருவாக்கியுள்ளார். ப்ளாக் பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரிகளில் உள்ள அதிக ஆக்ஸினேற்ற பண்புகளைக் கொண்ட ஊதா நிற தக்காளியை உருவாக்கியுள்ளார்.

ஸ்னாப்டிராகன் பூவின் இரண்டு மரபணுக்களையும், ப்ளூ மற்றும் ப்ளாக் பெர்ரிகளில் உள்ள மரபணுக்களையும் பயன்படுத்தியுள்ளார். இது சிவப்பு தக்காளியில் நிற மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அந்தோசயனின் என்ற வேதிப்பொருள் உற்பத்தியை அதிகரித்து, ஊதா நிறத்திற்கு மாற்றியுள்ளார்.

ஊதா நிற தக்காளி கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட காலம் ஆன போதிலும் தற்போது தான் இதனை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் யுஎஸ்டிஎஸ்ஏ அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து அடுத்த ஆண்டு முதல் ஊதா நிற தக்காளிகள் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.

ஊதா தக்காளியில் உள்ள அந்தோசயனின் ஆரோக்கியமான ஆக்ஸினேற்ற பண்புகளையும், மற்ற சத்துக்களை செறிவூட்டும் தன்மையையும் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் மார்ட்டின், சிவப்பு நிற தக்காளியை விட ஊதா நிற தக்காளி அதிக ஆயுள் காலத்தை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு ஊதா மற்றும் சிவப்பு நிற தக்காளிகளை சாப்பிட கொடுத்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் சிவப்பு நிற தக்காளிகளைச் சாப்பிட்ட எலிகளை விட ஊதா நிற தக்காளிகளைச் சாப்பிட்ட எலிகள் புற்றுநோயில் இருந்து உயிர் பிழைக்க 30 சதவீதமும், டைப் 2 நீரழிவு நோயில் இருந்து பாதுகாக்கவும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவைச் சேர்ந்த மரபியல் பேராசிரியர் ஒருவர் பிங்க் மற்றும் மஞ்சள் நிறத்திலான தக்காளிகளை கண்டுபிடித்திருந்தார். வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த மொஜெர்லாவில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரியில், மரபியல் மற்றும் தாவர வளர்ப்புத் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வரும் பிடிகம் சைதையா என்பவர் அதிக மகசூல் மற்றும் குறைந்த ஆயுள் காலத்தை கொண்ட பிங்க் மற்றும் மஞ்சள் நிற தக்காளிகளை கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment