சமையல் வேலைக்கு செல்லும் சீதாவிற்கு பிள்ளைகளால் ஏற்படும் அவமானம் – தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்…

by Column Editor
0 comment

சமையல் வேலைக்கு செல்லும் சீதா, பிள்ளைகளால் ஏற்படும் அவமானம் தவமாய் தவமிருந்து சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தவமாய் தவமிருந்து. ராஜா, ரவி, ரேவதி என பெத்த பிள்ளைகள் எல்லோரும் துரோகம் செய்ய அதனால் மரணம் வரை சென்று உயிர் பிழைத்து வந்த மார்க் வீட்டில் கோடு போட்டு பிரித்தார். இதனையடுத்து ராஜா வட்டி கட்டாத காரணத்தால் பைக்கை கொளுத்தினான்.

பிறகு கரண்ட் பில் அதிகம் வந்திருக்கு ஆளுக்கு 2,000 பணத்தை கொடுக்குமாறு சொல்ல யாரும் பணம் தராத காரணத்தினால் சீதா உண்டியலை உடைத்து அந்த பணத்தை எடுத்து வைத்தாள். இந்த விஷயம் அறிந்த மார்க் சீதாவுக்கு பிள்ளைகள் குணத்தை காட்ட திட்டம் போட்டு பியூஸ் போட போக அப்போது கரண்ட் ஷாக் அடித்து கீழே விழ மார்க்கை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

தனியாளாக சீதா மாரக்கை ஆம்புலன்ஸில் ஏற்றி செல்ல பிறகு தான் மார்க் போட்டது டிராமா என தெரிய வந்தது. பிறகு இருவரும் வீட்டுக்கு வந்து பிள்ளைகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

இதனையடுத்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சீதா குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போக முடிவெடுக்கிறாள். ஆனால் மார்க்கிடம் இந்த விஷயத்தை மறைத்து உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக பொய் சொல்லி ஒரு பணக்கார வீட்டில் ( ரவியின் பாஸ் வீட்டில் ) சமையல் வேலைக்கு செல்கிறாள்.

சமையல் வேலைக்கு வந்த சீதாவை எல்லா வேலையையும் செய்ய வேண்டும் என அந்த வீட்டார் வற்புறுத்த வேறு வழியில்லாமல் எல்லா வேலைகளையும் செய்கிறாள். இந்த பக்கம் மார்க் நீலகண்டனை பார்க்க போன இடத்தில் அங்கு ஒருவருக்கு செய்த உதவியால் மார்க்கிற்கு டிரைவர் வேலை கிடைக்கிறது.

பிறகு ரவியின் பாஸ் அவனது குடும்பத்தை பார்ட்டி ஒன்றுக்கு அழைக்க அப்போது சமைக்கும் வேலையை சீதா தான் செய்கிறாள். இங்கு ரவி, ராஜா உள்ளிட்டோர் வந்ததும் அவர்களின் கண்ணில் படாமல் இருக்க முயற்சி செய்கிறாள். ஆனாலும் ஒரு கட்டத்தில் சீதா வேலை செய்வது தெரிய வர அந்த இடத்தில் எப்படி எல்லாம் பிள்ளைகளால் அவமானப்படுத்தப்படுகிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

Related Posts

Leave a Comment