அதிக எண்ணெய் பிசுக்கினால் முகத்தில் உருவாகும் துளைகள்… சீராக்குவதற்கான எளிய வழிகள்…

by Column Editor
0 comment

எண்ணெய் சருமத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை சமாளிக்க, சிலவற்றை தொடர்ச்சியாக செய்து வருவது முக்கியம். குறிப்பாக சரியான புராடக்ட்களை பயன்படுத்த வேண்டும். மேலும் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.

வானிலை மாறுபாடுகள், அதிக ஈரப்பதம் மற்றும் அதிகப்படியான வியர்வை ஆகியவை உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பெரும்பாலும் பாதிக்க கூடும். இதனால் முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்து கொண்டே இருக்கும். மேலும் இதன் காரணமாக முகப்பரு மற்றும் க்ரீஸ் சருமம் உள்ளிட்ட தோல் பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றுடன் அதிக வியர்வை உங்கள் சருமத்தின் துளைகளை பெரிதாக்கி எண்ணெய், தூசுக்கள் மற்றும் கசடுகளால் அடைத்து, முகப்பரு உருவாகும் வாய்ப்பை மேலும் அதிகரிக்கும்.

எனவே இது போன்ற எண்ணெய் சருமத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை சமாளிக்க, சிலவற்றை தொடர்ச்சியாக செய்து வருவது முக்கியம். குறிப்பாக சரியான புராடக்ட்களை பயன்படுத்த வேண்டும். மேலும் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும், அவற்றை பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.

முகம் கழுவுதல்

முகத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது முகம் கழுவுதல் தான். ஈரப்பதம் அதிகரித்து, அழுக்கு, வியர்வை, எண்ணெய் மற்றும் தூசுகள் முகத்தின் துளைகளை அடைத்து, முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் ஏற்படுத்துவதால் உங்கள் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். வேம்பு, துளசி மற்றும் மஞ்சள் போன்ற இயற்கையான மூலப்பொருட்களை கொண்ட ஒரு மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். இவற்றுடன் தினமும் இரண்டு முதல் மூன்று முறை க்ளென்சரைப் பயன்படுத்தவும் செய்யலாம். நீர் சார்ந்த க்ளென்சர் பயன்படுத்துவது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்!

ஸ்க்ரப்பிங்

மற்றொரு இன்றியமையாத தோல் பராமரிப்பு வழிகளில் ஒன்று லேசான ஸ்க்ரப்பிங் முறையாகும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நச்சுகளை அகற்றும். மேலும் இறந்த சரும செல்களை சுத்தம் செய்து, உங்கள் சருமத்தை பிரகாசமாகவும் பொலிவாகவும் மாற்றும். மேலும் இது க்ரீஸ் மற்றும் எண்ணெய் சருமத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழியாகவும் இருக்கும். எனவே, வேம்பு மற்றும் துளசி சார்ந்த ஃபேஸ் ஸ்க்ரப்பைப் பயன்படுத்தி, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அசுத்தங்களை நீக்கி, மென்மையாகவும் மிருதுவாகவும் தோலை மாற்றுங்கள்.

SPF கொண்ட க்ரீம்

நீங்கள் வெளியில் சென்றாலும் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்தாலும், வெயிலாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் சருமத்தைப் புற ஊதா கதிர்வீச்சு பாதிக்காமல் இருக்க எப்போதும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். சன்ஸ்கிரீன் உங்கள் சருமத்தை ஆபத்தான UVA மற்றும் UVB கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது வெயிலின் பாதிப்பு, விரைவில் வயதாகும் தன்மை போன்ற அபாயத்தைக் குறைக்கும்.

ஈரப்பதம்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தக்கூடாது என்று பலர் கூறுவார்கள். ஆனால், அது அப்படியில்லை. எண்ணெய் சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் மிகவும் அவசியம். சரியான மாய்ஸ்சரைசர் சருமத்தின் இயற்கையான நீரேற்றத்தை உறுதி செய்து, சரும பிரச்சனைகளை தடுக்கும். கூடுதலாக, இது உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்குவதோடு சுருக்கங்களைத் தவிர்க்கவும் செய்கிறது. மேலும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும்.

மேக்கப்

மழைகாலங்களில் மேக்கப் அணிவது பல நேரங்களில் சரியான தேர்வாக இருக்காது. எனவே இதுபோன்ற நேரங்களில் நீர் எதிர்ப்பு மேக்கப்பைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் முகத்தின் துளை அடைப்பு மற்றும் முகப்பருவைத் தடுக்க படுக்கைக்கு செல்வதற்கு முன் துளசி மற்றும் வேம்பு கொண்ட ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி அகற்ற மறக்காதீர்கள்.

Related Posts

Leave a Comment