பளபள சருமம், பட்டுபோன்ற கூந்தலும் பெற உதவும் உணவுப் பொருட்கள் எவை தெரியுமா?

by Column Editor
0 comment

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அடர்த்தியான கூந்தல் பெற வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், செலினியம் போன்றவை மிகவும் முக்கியமாக விளக்குகிறது.

பொலிவான சருமமும், அடர்த்தியான கூந்தலும் வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவாகவே இருக்கும். அப்படிப்பட்ட பெண்களின் கனவை நனவாக்குவதில் ஊட்டச்சத்து மிக்க உணவு முக்கிய பங்குவகிக்கிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள தாதுகள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் ஆகிய சத்துக்கள் தான் சருமம் மற்றும் கூந்தல் இளைமையாகவும், பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க காரணமாக அமைகிறது.

சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் பராமரிக்க வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், செலினியம் போன்றவை மிகவும் முக்கியமாக விளக்குகிறது. கருகருவென அடர்த்தியான கூந்தலுக்கு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம், இரும்புச் சத்து ஆகியவை தேவைப்படுகிறது. எனவே உணவில் சரிவிகித சத்துக்களை எடுத்துக்கொள்வது சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிக்க உதவும்.

ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் அழகான தோல் மற்றும் கூந்தலுக்குச் சிறந்த உணவுகளைப் பரிந்துரைத்துள்ளார். பாலிவுட்டில் பல விஐபி கிளைன்ட்களை வைத்திருக்கும் ருஜுதாவிற்கு, இன்ஸ்டாகிராமிலும் மில்லியன் கணக்கான பாலோயர்கள் உள்ளனர். குறிப்பாக கரீனா கபூர் கானின் விருப்பமான ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அவர் தோல் மற்றும் கூந்தலுக்குச் சிறப்பான உணவுகள் பற்றிய தனது நிபுணத்துவம் மிக்க அனுபவ அறிவை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆரோக்கியமான சருமத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள்:

1. முகம் மற்றும் கண்களைச் சுற்றி எழும் வீக்கத்தைச் சரி செய்யப் பெருஞ்சீரக தண்ணீர் மிகுந்த பலனளிக்கிறது. பெருஞ்சீரகத்தை இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அதனைக் குடிப்பது சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

2. சிறிதளவு வெட்டிவேர் அல்லது வேலா வேர்களை எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் இயற்கையான பளபளப்பான சருமத்தைப் பெற முடியும், வெட்டி வேரைக் காயவைத்து உடம்பை தேற்று குளிக்கப் பயன்படுத்தலாம்.

3. வறுத்த வாழைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வேர்க்கடலை உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல, உங்கள் ஹார்மோன்களுக்கும் சிறந்தது. வாரம் ஒருமுறை இவற்றைச் சாப்பிடுவது நல்லது.

4. முகப்பருக்களை நீக்க ரோஜா இதழ்களைக் கொண்ட இயற்கையான ஃபேஸ் மாஸ்க்கை வீட்டிலேயே தயாரித்து உபயோகிப்பது நல்ல பலன் தரும்.

அடர்த்தியான கூந்தலுக்குச் செய்யவேண்டியவை:

1. கருகருவென அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலைப் பெற வேண்டும் என்றால், தலைக்குத் தேய்க்கக் கூடிய எண்ணெய் உடன் சிறிதளவு மருதாணி இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி ஆரவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

2. கார்டன் க்ரெஸ், ஹலீம் என்று அழைக்கப்படும் ஆளி விதைகளை ஊறவைத்து, இரவில் பாலுடன் சாப்பிட்டு வர அழகான முடி மற்றும் சருமம் கிடைக்கும்.

3. நெய்யில் உள்ள கொழுப்புச்சத்து கூந்தல் மற்றும் சருமத்திற்குப் பளபளப்பைத் தரக்கூடியது என்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Related Posts

Leave a Comment