கணவருடன் விதவிதமான போஸில் ’வள்ளி திருமணம்’ நடிகை நக்‌ஷத்ரா!

by Column Editor
0 comment

சீரியல் நடிகை நக்‌ஷத்ரா பதிவிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்கள்..

யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நக்‌ஷத்ரா. இந்த சீரியல் மூலம் நக்‌ஷத்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

தற்போது கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நக்‌ஷத்ரா.

சமீபத்தில் நக்‌ஷத்ரா விஸ்வா என்பவரை திருமண செய்துக்கொண்டார். அவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலானது. ஏன் திடீரென திருமணம் செய்துக்கொண்டீர்கள் என ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பினார்கள்.

திடீர் திருமணத்திற்கான காரணத்தையும் நக்‌ஷத்ரா பேட்டிகளில் கூறியிருந்தார். தாத்தாவுக்கு உடல் நிலை மிகவும் சரியில்லாத காரணத்தினால் இந்த அவசர திருமணம் என்று கூறினார்.

திருமணத்திற்கு பிறகு விஸ்வா, நக்‌ஷத்ரா தம்பதியினர் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

நக்‌ஷத்ரா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

ஓணம் கொண்டாட்டத்தின் போது கணவருடன் நக்‌ஷத்ரா எடுத்துக்கொண்ட புகைப்படம்.

Related Posts

Leave a Comment