அக்டோபர் மாதத்தில் நீங்கள் சுற்றுலா செல்ல அருமையான இடங்களின் பட்டியல் இதோ.!

by Column Editor
0 comment

அக்டோபர் மாத விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொண்டு நம் நாட்டில் பறந்து விரிந்த இயற்கையான சுற்றுலா தலங்களை நீங்கள் பார்வையிடலாம்.

துர்கா பூஜா, நவராத்திரி, தசரா, என அக்டோபர் மாதத்தில் அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு சில பண்டிகைகளுடன், வார விடுமுறை நாட்களும் சேர்ந்து கொள்ளும் பட்சத்தில் நீண்ட நாட்கள் அவகாசம் கிடைக்கும். ஆக, விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொண்டு நாட்டில் பறந்து விரிந்த இயற்கையான சுற்றுலா தலங்களை நீங்கள் பார்வையிடலாம்.

சோன்மார்க், காஷ்மீர்:

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று வர்ணிக்கப்படும் காஷ்மீர் பகுதியில் உள்ள இயற்கையான மலைப்பிரதேசம் தான் இந்த சோன்மார்க். இப்பகுதியை தங்கம் போர்த்திய மலை என்று வர்ணிக்கின்றனர். இமாலய மலை அடிவாரங்கள், அமர்நாத் மலை போன்றவை இங்கு பார்வையிடக்கூடிய இடங்களாகும்.

ஊட்டி, தமிழ்நாடு:

மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டி இந்திய மக்களால் மிகவும் நேசிக்கப்படும் மலை ஸ்தலங்களில் ஒன்றாக இருக்கிறது. பசுமை போர்வை போர்த்தியதைப் போல பறந்து விரிந்த தேயிலை தோட்டங்கள், வெண்மை படர்ந்த ஏரிகள், ரோஸ் கார்டன் உள்ளிட்டவை இங்கு பார்வையிடக்கூடிய இடங்களாகும். மிக அமைதியாக தியானம் செய்து மன நிம்மதியை தேடுவதற்கான சிறப்பான இடமாகும்.

தவாங், அருணாச்சல பிரதேசம்:

நீர்வீழ்ச்சி, புத்த மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவை நிறைந்த இந்த மலைப்பிரதேசமானது 3048 மீட்டர் உயரம் கொண்டது. இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஜெய்சால்மர், ராஜஸ்தான்:

பாலைவனப் பகுதியான இங்கு நீங்கள் ஒட்டக சவாரி மேற்கொள்ளலாம். நிலவு ஒளியில் இரவு விருந்து உண்ணலாம். மன்னர் ஆட்சியில் பாரம்பரிய கட்டடங்கள் பலவற்றை இங்கு கண்டு ரசிக்கலாம். ராஜஸ்தான் கலாச்சார நடனம் மற்றும் ராஜஸ்தான் உணவு வகைகள் ஆகியவை பிரத்தியேக சிறப்பம்சம் கொண்டவை.

ஹம்பி, கர்நாடகா:

தென்னிந்தியாவில் விஜயநகர பேரரசின் கீழ் இருந்த புராதான நகரங்களில் இதுவும் ஒன்று. யுனெஸ்கோ அமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இங்குள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் தரிசனம் செய்யலாம்.

ஆலப்புழா, கேரளா:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆலப்புழா என்பது சுற்றுலா தலம் கிடையாது. ஆனால் கேரள சுற்றுலாத்துறை மேற்கொண்ட அடுத்தடுத்த முயற்சிகளால் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஆலப்புழா மாறி இருக்கிறது. குறிப்பாக இங்குள்ள படகு இல்லங்களில் தங்குவது பிரத்தியேக அனுபவத்தை கொடுக்கும்.

கன்னியாகுமாரி, தமிழ்நாடு:

நாட்டின் தென்பகுதி எல்லையில் அமைந்துள்ளது. கடலோர நகரமான இது தமிழகம் மற்றும் கேரளா இடையேயான எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது. அழகான கடற்கரை, 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை மற்றும் நினைவிடம் ஆகியவற்றை இங்கு பார்வையிடலாம்.

Related Posts

Leave a Comment