அதிக சிக்சர்கள்: மார்டின் கப்தில் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா …

by Column Editor
0 comment

மொஹாலி:

அஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த மார்டின் கப்தில் சாதனையை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

மொஹாலில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி மோசமான பந்துவீச்சால் 4 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்த நிலையில், நேற்றைய டி20 போட்டியில் இந்தியாவுக்கு ஒரே ஆறுதல் ரோஹித் சர்மாவின் சிக்சர் சாதனைதான். ஏனெனில் மற்றபடி நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் தவிர மற்ற விஷயங்கள் சொதப்பலாக அமைந்தன.

நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா 9 பந்துகளில் 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்து 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து ரோகித் சர்மா 172 சிக்சர்களுடன் டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த மார்ட்டின் கப்திலின் சாதனையை சமன்செய்தார். மார்டின் கப்தில் 172 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்,

தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் மோர்கன் (120 சிக்சர்கள்), ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (117 சிக்சர்கள்) ஆகியோர் உள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரின் அடுத்த போட்டி நாக்பூரில் நடைபெறுவதையடுத்து ரோஹித் சர்மா, கப்தில் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment