விக்கியின் குடும்பத்தை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்திய நயன்தாரா? அப்படியென்ன விசேஷம்?

by Column Editor
0 comment

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது 37-வது பிறந்தநாளை அவரது மனைவி நயன்தாரா மற்றும் குடும்பத்தினருடன் துபாயில் சந்தோஷமாக கொண்டாடி இருக்கிறார்.

நயன்தாரா விக்னேஷ்:

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

சமீபததில் இரண்டாவது ஹனிமூன் ஸ்பெயினில் கொண்டாடிய இவர்கள், பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

விக்கியின் பிறந்தநாள்:

இயக்குனர் விக்னேஷ் சிவன் செப்டம்பர்-18ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார், அவரது பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா துபாய் அழைத்து சென்றுள்ளார்.

உலகின் மிக உயரமான கட்டிடமாக போற்றப்படும் துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர், நயன்தாரா அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாடினர்.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், ‘எனது பிறந்தநாள் என் குடும்பத்தினரின் பரிசுத்தமான அன்பாலும், என் தங்கம், என் மனைவியின் சர்ப்ரைஸாலும் நிறைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment