உடைக்கப்பட்ட மகாராணியின் மந்திரக்கோல்! இறுதி பயணத்தில் வித்தியாசமான அரச சடங்கு …

by Column Editor
0 comment

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிரியாவிடையளிக்கும் போது மந்திரக்கோல் உடைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர். அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் உடல் தாங்கிய பேழை புதைக்கப்பட்டது.

இறுதி கணத்தில் வித்தியாசமான அரச சடங்கு:

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் பேழை மீது வைத்தார்.

ராணியின் வாழ்க்கை பயணம் முடிவுக்கு வந்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, ராணியின் மூத்த மகன் சார்லஸ் கைப்பட எழுதிய இரங்கல் கடிதம் ஒன்றை பேழை மீது வைத்து, தனது தாயும் நாட்டின் ராணியாகவும் இருந்த எலிசபெத்திற்கு பிரியாவிடை அளித்தார்.

இறுதியாக பிக்பைபர் எனப்படும் இசைக்கருவி இசைக்கப்பட்டது.ஒவ்வொரு நாளும் ராணி காலை எழுந்திருக்கும் வேளையில் இசைக்கப்படும் இந்த இசைக்கருவி, ராணியின் வாழ்க்கை பயணம் முடிவடைந்ததை உணர்த்தும் விதமாக சோக ராகத்தை இசைக்க கூடியிருந்த மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

Related Posts

Leave a Comment