வைரஸை காட்டி கொடுக்கும் புதிய மாஸ்க் கண்டுபிடிப்பு …

by Column Editor
0 comment

கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகத்தையே கட்டுக்குள் இன்று வரை வைத்திருந்தாலும், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

வைரஸை கண்டுபிடிக்கும் மாஸ்க்:

இந்நிலையில், காற்றில் பரவும் வைரஸ் கண்டுப்பிடிக்க புதிய முகக்கவசத்தை MIT and Harvard University பல்கலைக்கழகம் பொறியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த முகக்கவசத்தை அணிந்துகொண்டு வெளியில் செல்லும்போது காற்றில் எந்த வகையான வைரஸ் இருந்தாலுமே மாஸ்க் அணிந்திருப்பவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி சென்று விடுமாம்.

ஆன்டிபாடிகள் போன்ற நோய்க்கிருமிகளின் தனித்துவமான புரதங்களை அடையாளம் காணக்கூடிய ஒரு வகை செயற்கை மூலக்கூறான அப்டேமர்களை கொண்ட சிறிய சென்சார்களான SARS-CoV-2, H5N1 மற்றும் H1N1 இந்த மாஸ்கில் பொருத்தப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment