வெற்றி நடைபோடுமா இந்தியா? – இன்று முதல் டி20 போட்டி …

by Column Editor
0 comment

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

டி20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுடன் டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரானது இன்று முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று இரவு மொஹாலியில் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் தங்களை சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள இந்த தொடர் உதவிகரமாக இருக்கும். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் வலிமை சேர்த்துள்ளது. போட்டி நடக்கும் மொகாலி மைதானத்தில் இதுவரை ஐந்து டி20 ஆட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது.

Related Posts

Leave a Comment