டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு …

by Column Editor
0 comment

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி சுற்றுக்கு முன்னேறும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டிக்காக இப்போதே பல்வேறு நாடுகள் தங்கள் அணியை வலுப்படுத்த தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இல்ஞ்கை உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துள்ளன. இந்நிலையில், 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிம் சவுதி, மிட்செல் சாண்ட்னர், ஆடம் மில்னே, மார்டின் கப்தில், டெவோன் கான்வே, டிரெண்ட் போல்ட் உள்ளிட்டோர் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி :

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுத்தி , இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாச்லன் பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரென்ட் போல்ட், பின் ஆலன்.

Related Posts

Leave a Comment