விராட் கோலியை நோக்கி ஏகப்பட்ட பவுன்சர்கள்.. சதம் அடித்து மீண்டும் சாதிப்பாரா?

by Column Editor
0 comment

நாளை ஆஸ்திரேலியா ஷார்ட் பிட்ச் பவுன்சர்களை அவருக்கு வீசலாம் என்று பயிற்சியில் பவுன்சர்களை எதிர்கொண்டார் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை மொஹாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலியை நோக்கி ஏகப்பட்ட பவுன்சர்கள் வீசப்பட்டன.

விராட் கோலி ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொண்டு ஹூக், புல் ஷாட்களை ஆடக்கூடியவர். பின் வாங்குபவர் அல்ல. ஆனாலும் நாளை ஆஸ்திரேலியா ஷார்ட் பிட்ச் பவுன்சர்களை அவருக்கு வீசலாம் என்று பயிற்சியில் பவுன்சர்களை எதிர்கொண்டார் கோலி.

வலைப்பயிற்சி, தேகப்பயிற்சி, ஃபிட்னெஸ், கட்டுக்கோப்பு, ஒழுக்கத்தில் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்பவர் விராட் கோலி. 45 நிமிடங்கள் வலையில் பயிற்சி மேற்கொண்டார் விராட். ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் சதத்தை வைத்து பார்முக்கு வந்து விட்டார், பார்முக்கு வந்து விட்டார் என்று ஊடகங்கள் தம்பட்டம் அடித்து வருகின்றன, ஆனால் அவர் தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை என்பது அவர் தேர்வு செய்யும் ஷாட்களைப் பார்ப்பவர்களுக்கும் கிரிக்கெட்டை நுணுக்கமாக பார்ப்பவர்களுக்கும் புரிந்த விஷயம்.

அன்று ஆப்கானிஸ்தான் முதல் நாள் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்த விரக்தியில் பந்து வீசினார்கள், சரியாக வீசவில்லை, இது புரியாமல் சில ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக நன்றாக வீசினார்களே அதே போல்தான் இந்தியாவுக்கு எதிராகவும் வீசினார்கள் என்று விவரம் புரியாமல் பேசி வருகின்றனர். அன்று ஆப்கானிஸ்தான் வெறுப்பில் வீசியது அவர்களது உடல்மொழியைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.

கோலியை அவர்கள் அவுட் ஆக்கவே முயற்சி செய்யவில்லை என்பதே உண்மை. ஆனால் கோலியிடம் தெரியும் மாற்றம் என்னவெனில் ஷாட்களை ஆடுவதற்கான ஒரு அவசரம் தெரிகிறது, முதல் பந்திலிருந்தே ஷாட்டுக்குப் போகிறார், அதன் பலன் இலங்கைக்கு எதிராக குச்சி போனதுதான், டக் அவுட் ஆனதுதான். ஆனால் அணியின் புதிய கருத்தாக்கம் படி முதல் பந்திலிருந்தே ஆக்ரோஷம் காட்ட வேண்டும் என்பதே.

இந்நிலையில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் விராட் கோலி ஆடும் போது 2016 உலகக்கோப்பை டி20-யில் ஆடிய 82 நாட் அவுட் இன்னிங்ஸ் அனைவரின் கண் முன்னாலும் வந்து போகவே செய்யும். நாளை மேட்ச் தொடங்குவதற்கு முன்பாக இரண்டு ஸ்டேண்ட்களுக்கு ஹர்பஜன்சிங், யுவராஜ் சிங் பெயர்களைச் சூட்டும் வைபவமும் நடக்கிறது.

Related Posts

Leave a Comment