இங்கிலாந்து மகாராணி எலிசபெத் காலமானார்

by News Editor
0 comment

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இன்று காலமானார். லண்டன், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத். இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 96 வயதாகிறது. உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஸ்காட்லாந்தில் உள்ள பண்ணை வசித்துவந்தார். அவரை மருத்துவக்குழு கண்காணித்து வந்தது. இதனிடையே, ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாராணி எலிசபெத் இன்று உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment