ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க சுகாதார பழக்கங்கள்!

by News Editor
0 comment

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் என்று வரும் போது அதில் அந்தரங்க சுகாதாரமும் ஒரு முக்கியமான பகுதியாகும். எப்படி உடலின் மற்ற பாகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது முக்கியமோ, அதேப் போல் பிறப்புறுப்புக்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வதும் முக்கியம். அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், அது மோசமான துர்நாற்றம், அரிப்பு, அதிகப்படியான வியர்வை, தடிப்புகள், பருக்கள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

அந்தரங்க பகுதியை சுத்தமாக பராமரிப்பதால் தொற்றுக்களில் இருந்து விலகி இருப்பதோடு, பாலியல் அனுபவமும் மேம்படும். ஏனெனில் அந்தரங்க பகுதியானது மிகவும் சென்சிடிவ்வானது. எனவே இப்பகுதியை சுத்தமாக பராமரிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. பொதுவாக பெண்கள் எப்போதும் தங்களின் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வார்கள்.

மேலும் ஆண்களின் அந்தரங்க சுகாதாரம் பெண்களிடமிருந்து வேறுபட்டது. அதோடு ஆண்களுக்கான அந்தரங்க சுகாதாரத்தைப் பற்றி அதிகம் எங்கும் பேசப்படுவதில்லை. இதன் விளைவாக பல ஆண்களுக்கு பிறப்புறுப்பு சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரியவதில்லை.

ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதற்காக சர்வதேச ஆண்கள் சுகாதார வாரம் (ஜூன் 14-20) கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தை முன்னிட்டு, தமிழ் போல்ட்ஸ்கை ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய சில அத்தியாவசியமான அந்தரங்க சுகாதார பழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சுத்தமான உள்ளாடையை அணியவும் இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே தவறாமல் நினைவில் கொண்டு பின்பற்ற வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் ஒன்றாகும். உங்கள் பிறப்புறுப்புக்களில் வைரஸ்கள், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடையை அடிக்கடி மாற்ற வேண்டும். மேலும் சிந்தடிக் துணிகளாலான உள்ளாடைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, காட்டன் துணியால் ஆன உள்ளாடையைப் பயன்படுத்த வேண்டும். உங்க கண்களில் இந்த மாதிரி அறிகுறி இருந்தா… அது மாரடைப்பை ஏற்படுத்தும் பிபியோட அறிகுறியாம்..! அடிக்கடி கழுவி உலர வைக்கவும் அந்தரங்க பகுதியை சோப்பு பயன்படுத்தி அடிக்கடி (குறைந்தது ஒரு நாளைக்கு ஒருமுறை) கழுவ வேண்டும்.

அதோடு அந்த பகுதியை நன்கு உலர வைக்க வேண்டும். இதனால் பூஞ்சை தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கலாம். அதோடு உடலுறவு கொள்வதற்கு முன்னும், பின்னும் தவறாமல் அந்தரங்க பகுதியைக் கழுவ வேண்டும். இதனால் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கலாம். உங்க நாக்கில் இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தால் அது இந்த குறைபாட்டோட அறிகுறியாம்… ஜாக்கிரதை…! வழக்கமாக ட்ரிம் செய்யவும் அந்தரங்க பகுதியில் வளரும் முடி, அப்பகுதியை வெதுவெதுப்பாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால் அதே சமயம் அப்பகுதியில் அதிகமாக வியர்க்கவும் வைக்கும் என்பதும் உண்மை. ஆகவே வியர்வையைக் குறைக்க அடிக்கடி அப்பகுதியில் உள்ள முடியை ட்ரிம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இதனால் வியர்வையால் பாக்டீரியாக்கள் பெருகுவதைத் தவிர்க்கலாம். அதுவும் ரேசர் பயன்படுத்துவதைத் தவிர்த்து, நல்ல தரமான ட்ரிம்மரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ரேசர் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும்.

அப்ப உங்களுக்கான மகிழ்ச்சியான செய்திதான் இது… அவசியம் தெரிஞ்சிக்கோங்க! மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவும் எப்போதெல்லாம் அந்தரங்க பகுதியை சுத்தம் செய்து, ட்ரிம் அல்லது ஷேவ் செய்கிறீர்களோ, அப்போது அதைத் தொடர்ந்து நல்ல தரமான மாய்ஸ்சுரைசரையும் பயன்படுத்துங்கள். இது ட்ரிம் செய்த பின் ஏற்படும் அரிப்புக்களைக் குறைக்க உதவும். இதனால் அடிக்கடி அந்தரங்க பகுதியை சொறிந்து கொண்டிருப்பதைத் தவிர்க்கலாம். ஆரோக்கியமாக சாப்பிடவும் நல்ல ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உட்கொள்வது வியர்வையையும், துர்நாற்றத்தையும் குறைக்க உதவும். அதற்கு சிட்ரஸ் பழங்கள், பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் உட்கொள்வதோடு, போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும் மற்றும் க்ரீன் டீ குடிக்க வேண்டும். இதனால் அந்தரங்க பகுதியில் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

Related Posts

Leave a Comment