திருமந்திரம் – பாடல் 1499: ஐந்தாம் தந்திரம் – 11.

by Column Editor
0 comment

சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)
உயர்ந்து பணிந்து முகந்துந் தழுவி
வியந்து மரனடிக் கைமுறை செய்யின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்தும் பரிக்கிற் பான்நன்மையி னாகுமே.
விளக்கம்:
ஒழுக்கத்தில் உயர்ந்து நின்றும் இறைவனின் திருவடிகளை பணிந்து தொழுதும் அவனுக்கு செய்கின்ற பணிவிடைகளை விரும்பி செய்தும் இறைவனின் திருவுருவத்தை தழுவிக் கொண்டும் அதனால் கிடைக்கின்ற இறையனுபவத்தால் வியப்படைந்தும் இறைவனின் திருவடிகளுக்கு தமது கைகளால் தொண்டுகளை செய்தால் அந்த தொண்டே தாம் எடுத்த பிறவிக்கு கிடைக்கின்ற மிகப் பெரும் பயனாக இருக்கும். அப்படி கிடைத்த அருளினால் இறைவனை தந்தையாக பாவித்து தொடர்ந்து அந்த தொண்டுகளை செய்து கொண்டே வந்தால் தந்தையாக இருந்து அதை செய்ய வைக்கின்ற இறைவனே அதனால் கிடைக்கின்ற அனைத்து நன்மையாகவும் இருக்கின்றான்.

Related Posts

Leave a Comment