பிக்பாஸில் ஏற்பட்ட காதல்! பிபி ஜோடியில் அரங்கேறிய திருமணம்: அமீர் பாவனி திடீர் திருமணம்…

by Column Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து காதலர்களாக வலம்வரும் அமீர், பாவனி ஜோடி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட ப்ரொமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ் பாவனி:

பிரபல ரிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனி, இதை தொடர்ந்து நடிகர் பிரஜனுக்கு ஜோடியாக நடித்த ‘சின்னத்தம்பி’ சீரியல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

கணவரின் திடீர் தற்கொலையால், மன அழுத்தத்தில் இருந்த பாவனி, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக்பாஸில் அமீருக்கு ஏற்பட்ட காதல்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது காதலிப்பதாக கூறிய அமீருக்கு ஜோடியாக, ‘பிக்பாஸ்’ ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இணைந்து நனடம் ஆடி வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளன்று பாவனி அமீரை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தார். அதே போல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர், பாவனிக்கு காதல் பரிசாக மோதிரம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

பிபி ஜோடியில் அரங்கேறிய திருமணம்:

இந்நிலையில் பாவனி கூறிய பின்பு, பிபி ஜோடி செட்டிலேயே திருமணத்தையும் தடபுடலாக நடத்தி விட்டது அமீர் – பாவனி ஜோடி. இந்த வாரம் நடந்த டான்ஸ் நிகழ்ச்சியில் இவர்களது திருமணம் குறித்த காட்சி எடுக்கப்பட்டதுடன், அதனை ப்ரொமோவாகவும் வெளியிட்டுள்ளது்.

குறித்த ப்ரொமோ அவதானித்த நெட்டிசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலிக்க துவங்கி, பிக்பாஸ் ஜோடிகள் செட்டில் காதலை வெளிப்படுத்தி, அதே செட்டில் அமீர் திருமணத்தையும் முடித்து விட்டதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment