பள்ளி கட்டிடம் கட்ட தோண்டியபோது தொன்மையான புத்தர் சிலை கண்டெடுப்பு…

by Column Editor
0 comment

பொன்னேரி அருகே அரசு பள்ளி கட்டிடப் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த இரண்டு அடி உயர புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மீட்ட பொதுமக்கள் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர். ( செய்தியாளர்: பார்த்தசாரதி,திருவள்ளூர் )

மாவட்டம் தேவதானம் அருகே குமர சிறுலப்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் அங்கு பள்ளம் தோண்டும் போது மண்ணில் புதைந்திருந்த சுமார் இரண்டு அடி உயரம் கொண்ட புத்தர் சிலையானது அங்கு பணிபுரிந்தவர்கள் மூலம் கண்டெடுக்கப்பட்டது.

உடனடியாக இதுகுறித்து பொன்னேரி வருவாய்த் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு புத்தர் சிலையை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

பின்னர் அதனை பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொண்டு சென்று வைத்தனர். சிலையின் தொன்மை குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டு பின்னர் சிலையை உரிய இடத்தில் கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்தனர் .

Related Posts

Leave a Comment